FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 29, 2012, 11:15:12 PM

Title: கடற்கரை
Post by: ஆதி on August 29, 2012, 11:15:12 PM
அழகிய அச்சமும்
தோள்களில் முகம் சாய்த்தும்
கைகள் கோர்த்து அலைகளில்
நாம் கால் நனைக்கும்
அந்த நெருங்கிய அவகாசங்கள்
மிக மெல்லியவை..

நம்மை அளவளாவி செல்லும்
அலைகள் அள்ளி சென்றது
பயம் மிகுந்த
உனது நாணத்தையும்
சிரிப்பையும்..

உனதந்த சிரிப்பு
எங்காவது சிப்பிகளில்
முத்துக்களாகி இருக்கலாம்..
நாணம்பட முத்துக்கள்
சிவந்தும் இருக்கலாம்..

வருடல்களின் வர்ணங்களாய்
அலைகள் வரையும் ஈரங்களில்
மோதும் காற்றில்
முற்றி வெடிக்கிறது நமது
வரையரை மீறல்கள்..

அலையாய்
என் கைகளில் நீ
வளைந்து நெளிகளையில்
கரையாய் நான்
தாகம் கொள்கிறேன்
உன் ஈரங்களில்..

மலர் குவியலாய்
முகம் அள்ளி இதழ்களை
முகர விழைகையில்
கவிந்த உன் இமைகளில்
இருந்தும் குதித்தன
சில மீன்கள் மையல்களாய்
அலைகளில்..
Title: Re: கடற்கரை
Post by: Global Angel on August 29, 2012, 11:21:57 PM
Quote
வருடல்களின் வர்ணங்களாய்
அலைகள் வரையும் ஈரங்களில்
மோதும் காற்றில்
முற்றி வெடிக்கிறது நமது
வரையரை மீறல்கள்..

அலையாய்
என் கைகளில் நீ
வளைந்து நெளிகளையில்
கரையாய் நான்
தாகம் கொள்கிறேன்
உன் ஈரங்களில்..

மலர் குவியலாய்
முகம் அள்ளி இதழ்களை
முகர விழைகையில்
கவிந்த உன் இமைகளில்
இருந்தும் குதித்தன
சில மீன்கள் மையல்களாய்
அலைகளில்..

வாவ் ... இப்படி ஒரு காதல் கவிதை ... என்ன ரம்மியமான கவிதை .... ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க .. அட போங்கப்பா உங்க காதலி கொடுத்து வச்சவங்க ... கவிதை சொல்லியே கவுதுடுவீங்க நீங்க ,..^ஹஹஹஹா
Title: Re: கடற்கரை
Post by: suthar on August 29, 2012, 11:26:00 PM
nice one my friend...........touching lines.......
Title: Re: கடற்கரை
Post by: ஆதி on August 29, 2012, 11:27:31 PM
ஒருமுறை என் நண்பன் கேட்டான்

நண்பன் : ஏம் மச்சான், இப்படி உருகி உருகி கவிதை எழுதுறியே அந்த பொண்ணுக்கிட்ட காம்மிச்சியா

நான் : காம்பிச்சன் டா

நண்பன் : என்ன சொல்லுச்சு ?

நான் : தமிழ் படிக்க தெரியாதுனு சொல்லிச்சு

நண்பன் : :-| ????
Title: Re: கடற்கரை
Post by: ஆதி on August 29, 2012, 11:31:29 PM
nice one my friend...........touching lines.......


நன்றி நண்பர் சுதர்சன்
Title: Re: கடற்கரை
Post by: Global Angel on August 29, 2012, 11:33:31 PM
ஹஹஹா ... எனக்கு படிக்கச் தெரியும் ... ஆனா என்ன பண்ண ...மன்னிச்சுடுங்க  இதயத்தில் இடமில்லை ... ஹஹா  (Kidding)
Title: Re: கடற்கரை
Post by: suthar on August 29, 2012, 11:40:20 PM
tamil padka therinjaalum problem than pola aathi  onnum panna mudiyathu............
Title: Re: கடற்கரை
Post by: Global Angel on August 29, 2012, 11:41:30 PM
 >:( >:( >:( >:( >:( >:( >:( >:( suthar oru bittu poda vidurengala
Title: Re: கடற்கரை
Post by: ஆதி on August 29, 2012, 11:45:06 PM
ஹாஹ்ஹா :D
Title: Re: கடற்கரை
Post by: ஆதி on August 29, 2012, 11:46:07 PM
tamil padka therinjaalum problem than pola aathi  onnum panna mudiyathu............

ஹா ஹா ஹா

 வெடித்து சிரித்துவிட்டேன் சுதர்சன்