FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 29, 2012, 10:38:00 PM

Title: வறட்சியின் கோலம்
Post by: Global Angel on August 29, 2012, 10:38:00 PM
உன் அலட்சியத்தின் கட்டவிள்ப்பில்
கர்பபிளக்கிறது நம் காதல்
கலைந்து போன கோலங்களாய்
கனவுகள் சிதறி கிடக்கின்றது ..


மூச்சிரைக்கும் வரை
முத்த வேள்வியில் புரண்ட இதழ்கள்
வறட்சியின் கோலத்தில்
வெடித்து சிதறுகிறது
பற்களின் அழுத்தத்தில் .....


இறுமாந்திருந்த இதயம்
இணையற்ற பறவையாகி
இறக்கைகள் துண்டாடபட்டு
இரத்த வெள்ளத்தில் மூச்சு திணறுகின்றது ...


எங்கிருந்தாய்
எனக்குள் வந்தாய்
என் உயிர் மீது உலாவந்தாய்
உயிரற்ற ஓவியமாய்
உன் நினைவுக் கிறுக்கல்களில்
உன்னை தேடி அலைய வைத்தாய்


தனிமை சிறையில்
தத்தளிக்கும் என் உணர்வுகள்
விடுதலைக்காய் ஏங்குகின்றது
விருப்பம் இல்லாவிடினும்
விழிப்பார்வை ஒன்றை வீசிவிடு
விடுதலை பெறும்.............
Title: Re: வறட்சியின் கோலம்
Post by: ஆதி on August 29, 2012, 11:09:09 PM
//மூச்சிரைக்கும் வரை
முத்த வேள்வியில் புரண்ட இதழ்கள்
வறட்சியின் கோலத்தில்
வெடித்து சிதறுகிறது
பற்களின் அழுத்தத்தில் .....


இறுமாந்திருந்த இதயம்
இணையற்ற பறவையாகி
இறக்கைகள் துண்டாடபட்டு
இரத்த வெள்ளத்தில் மூச்சு திணறுகின்றது ...
//

வலித்தோய்ந்த வரிகளின் கனம் வாசிக்கையில் மனதையும் பற்றிக்கொள்(ல்)கிறது

//தனிமை சிறையில்
தத்தளிக்கும் என் உணர்வுகள்
விடுதலைக்காய் ஏங்குகின்றது
விருப்பம் இல்லாவிடினும்
விழிப்பார்வை ஒன்றை வீசிவிடு
விடுதலை பெறும்............//

துல்லியமாய் சொல்லியிருக்குறீர்கள் மன எண்ணங்களை

பாராட்டுக்கள்

Title: Re: வறட்சியின் கோலம்
Post by: Global Angel on August 29, 2012, 11:15:13 PM
நன்றிகள் ஆதி ...