FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 29, 2012, 08:06:48 PM

Title: பேரெழில் போற்றுதும்! பேரெழில் போற்றுதும்!
Post by: ஆதி on August 29, 2012, 08:06:48 PM
மலையருவி மேல்கவியும் மையல் நிலவும்
துளைவானைப் போர்த்துகிற காரிருளும் இட்டுக்
குலைத்தளாவி செய்த குழலவிழ்ந் தாடும்
தலையருவி யெனவிரிந் து!


பனித்தோய்த்து சூரியனை பக்குவ மாக்கி
மணிக்கோர்த்து மென்மையும் மையலும் ஈர்ப்பும்
தனித்தனியாய் சேர்த்து தவிப்பூட்டும் பார்வை
இனிப்பாய்சேர்த் தாக்கிய கண்!


கள்ளாடி போதையில்க விழ்ந்தா டுவதைப்போல்
பொல்லாத மார்ப்பிரண்டும் தள்ளாடி என்நெஞ்சை
அல்லாட வைத்துவிட்டு சல்லாப கண்களையும்
மல்லாடச் செய்யும் நிதம்.

விண்ணெறிந்த மின்னென்றார் வீசுகின்ற காற்றிலாடும்
மென்கொடி தானென்றார் வில்லாடும் நாணென்றார்
உன்னிடையை எப்படிப் பாட இடைக்குறுக்கம்
என்றுரைப்ப தைத்த விர
Title: Re: பேரெழில் போற்றுதும்! பேரெழில் போற்றுதும்!
Post by: Global Angel on August 29, 2012, 08:13:28 PM



ஹஹஹாஹ்  பொருள் பிரிக்க நான் முயலவில்லை ... மிகவும் அருமையான கவிதை பெண்ணை வர்நிப்பதையும் எடுக்கலாம் மலை இடை ஓடும் /பாயும் அருவி நிலையையும் எடுத்து கொள்ளலாம் .. நதியை கூட பெண் என்றுதானே சொல்கிறார்கள் ..


உவமான உவமேயங்கள் அருமை .... மெருகு தமிழ் மேன்மை  ;)
Title: Re: பேரெழில் போற்றுதும்! பேரெழில் போற்றுதும்!
Post by: suthar on August 29, 2012, 11:38:33 PM
aathi super ah ezhuthureenga... ethayaachu kondanthu kavithainu post panitu irukom nangalam kavithai nadai arumai..........