FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 29, 2012, 07:46:41 PM
-
இருளை விழுங்கி
ஒளியை உமிழ்ந்து கொண்டு
நிலவு நகர்ந்து கொண்டிருந்தது
என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....
என் மன சிறகில்
உன்னை மணாளனாய் வரித்து
பயணிக்க துடித்தேன் - நீயோ
வெட்ட வெளி தன்னில்
கரும்பாறை போல் இறுமாந்து இருக்கின்றாய் ..
நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..
இன்பத்தை விரட்டி - நம்
வசந்தங்களை மிரட்டி
நீயறைந்த ஆணி - என்
தனிமைச் சுவருக்குள்
என் சிறையிருப்பை
உறுதிப்படுத்துகின்றது....
காணமல் போகும் கனாக்களை
தேடி தேடியே நான்
நடைப்பிணம் ஆகிறேன் ..
இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து பிரார்த்தித்தே - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...
-
//என் நினைவும்
விருது பெறக்கூடிய நம்
காதல் பேச்சுக்களை அசை போட்ட வண்ணம் ....//
அற்புதம்
//நம் சந்திப்புக்களின்
சிலிர்ப்புக்களிலெல்லாம் - இப்போது நீ
சினம் தடவி தீப்பிழம்பாகின்றாய்..
//
இதற்கு பெயர்தான் வாசகனை ஒரு தளத்தில் இருந்து அவன் அறியாதவாறு அடுத்த தளத்துக்கு கடத்தி போவது
//இப்போது
ரணமாகிப் போன உன்
பிரிவின் கணங்களுக்காய்..........
பிரார்த்தித்து பிரார்த்தித்தே - என்
உதடுகளும்
முடமாகிப் போகின...
//
ஆற்றாமையையும் இயலாமையையும் காதற்துயரையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்குறீர்கள்
பாராட்டுக்கள், நல்ல கவிதை
-
அடடா நீங்க பாராட்டும் போதுதான் நம்ம கவிதை இம்புட்டு அழகா .... நாமளும் கவிதை ரசிக கூடிய மாதிரி எழுதுகின்றோமானு சந்தோசமா இருக்கு நன்றிகள் ஆதி ...
-
கவிதைக்கான மொழி உங்களிடம் திறம்பட இருக்கிறது, ஐயம் வேண்டாம் தொடருங்கள்
-
thanks :)