FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Anu on August 29, 2012, 09:06:41 AM
-
கடவுளை முன்னிறுத்தி...
விதை விதைத்தான்
அறுவடை செய்தான்
அருள்வாக்கு சொன்னான்
ஆன்மீகத்தை விற்றான்
கம்பெனி ஆரம்பித்தான்
காதுகுத்திக் கெடாவெட்டினான்
பூசாரியாய் குறி சொன்னான்
சாதியாய் பிரிந்து நின்றான்
எதிரிக்கு சாபம் கொடுத்தான்
திருடனை மிரட்டினான்
குடம் குடமாய் பால் ஊற்றினான்
குடும்பமாய் மொட்டை போட்டான்
வேண்டுதல்கள் வைத்தான்
உண்டியலில் கொட்டினான்
கடைசியாக...
பலமாடிக் கட்டிடத்தின்
படிக்கட்டு மூலையில்
எச்சில் துப்பாமல் இருக்க
காவலுக்கு வைத்தான்
-
மனதில மட்டும் நிறுத்தலை ... கடவுள் காவல் தெய்வம் மட்டுமே காக்கும் தெய்வம் என்பதை மறந்துட்டாங்க போல ..