FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 28, 2012, 11:20:48 PM

Title: காதல் பரிசாக
Post by: Global Angel on August 28, 2012, 11:20:48 PM
எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....


அன்றிலாய் உன்னுள் 
ஒன்றிட நினைத்து
தென்றலாய் தழுவினேன்
மனம் கன்றலாய் போனது மிச்சம் ..


ஒரு மனதாய் காதலித்தோம்
நீ மட்டும்
ஓர வஞ்சனை செய்ததேனோ ..
மனப் பந்தலில்
மாலை இட்ட என்னை
மரண பந்தலுக்குள் தள்ளவா
மணச் செய்தி தந்தாய் ..


குருதிக் கிடங்கில்
குளித்து கிடக்கும்
குட்டி இதயம்
குடை சாய்ந்து குமுறுகிறதே
கண்களுக்கு குற்றாலமும்
மனதுக்கு மயானமும்
நினைவுக்கு நிழலையும்
காதல் பரிசாக தந்தவனே


உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...
உன்னை தழுவும்
நினைவு காற்றுக்குள்
என்றும் தென்றலாய் நான் இருப்பேன்

எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....
Title: Re: காதல் பரிசாக
Post by: ஆதி on August 28, 2012, 11:59:31 PM
//எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் .... //

கனமான வரிகள்


//அன்றிலாய் உன்னுள்
ஒன்றிட நினைத்து
தென்றலாய் தழுவினேன்
மனம் கன்றலாய் போனது மிச்சம் ..
//

இணை பிரிந்தால் உய்யாது அன்றில் அப்படி இருக்க ஆசைப்பட்டு அது இடேறவில்லை

அன்றில், ஒன்றிட, தென்றலாய், கன்றலாய் எதுகைகள் அழகு

//ஒரு மனதாய் காதலித்தோம்
நீ மட்டும்
ஓர வஞ்சனை செய்ததேனோ ..
மனப் பந்தலில்
மாலை இட்ட என்னை
மரண பந்தலுக்குள் தள்ளவா
மணச் செய்தி தந்தாய் ..
//

சாதாரண வரி போல தோன்றினாலும்


//உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...//

அது அழுத்தமானதாய் ஆகிவிடுகிறது, இந்த சொல் சொல்ல எவ்வளவு காதல் வேண்டும்


//எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....//

வேறு விதமாய் முடித்திருக்கலாமோ ?

Title: Re: காதல் பரிசாக
Post by: Global Angel on August 29, 2012, 01:31:12 AM
நன்றி ஆதி இந்த முடிவுக்கு காரணம் ... அந்த நாதஸ்வர ஓசை ஒன்றே என்னை நினைவை ஸ்தம்பிக்க செய்கிறதென்றால் ... அதற்க்கு எவளவு சக்தி ..  ஏமாற்றத்தின் ஓசை அது இழப்பின் கதறல் அது  இன்பத்தின் முடிவு அது இயலாமையின் கண்ணீர் அது ... அதை சொல்லத்தான் இந்த முடிவு ...
Title: Re: காதல் பரிசாக
Post by: Anu on August 29, 2012, 06:22:52 AM
எங்கு கேட்டாலும்

உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...
உன்னை தழுவும்
நினைவு காற்றுக்குள்
என்றும் தென்றலாய் நான் இருப்பேன்


 ....


arumaiyaana kavithai ..
unga anbin aazhathaiyum adhan valiyaiyum
romba azhaga varigallla kavithaiyaai solli irukinga.
very nice dear
Title: Re: காதல் பரிசாக
Post by: Global Angel on August 29, 2012, 04:24:08 PM
thanks anumaa but seekram yaarayaavathu kaadhalikanum  ;) ;D ;D ;D ;D ;D
Title: Re: காதல் பரிசாக
Post by: ஆதி on August 29, 2012, 05:42:58 PM
இறுதி பத்திக்கு முந்தைய பத்தி தரும் உணர்ச்சி திடுமென்று முறிந்துவிடுகிறது கடைசி பத்தியால், கடைசி பத்தியின் உணர்ச்சியோடு இசைந்து போவது போல அதற்கு முந்தைய பத்தி இருந்திருந்தால் மிக அழுத்தமான கவிதயாக இருந்திருக்கும்

உன் கல்யாணப் பரிசாய்
என் காதலை தருகிறேன்
எடுத்து செல் ...
உன்னை தழுவும்
நினைவு காற்றுக்குள்
என்றும் தென்றலாய் நான் இருப்பேனென்று
வழியனுப்பி
வருடம் பல கழிந்த பிறகும்

எங்கு கேட்டாலும்
என் இதய நரம்புகளை
ஒரு கணம் உறைய செய்கிறது
நாதஸ்வரம் ....

இந்த மாதிரி ஒரு இணைப்பு வரி இருந்திருந்தால், கடைசிப்பத்தி எழுத்தமானதாக இருக்கும் என்பது என் கருத்து
Title: Re: காதல் பரிசாக
Post by: Global Angel on August 29, 2012, 07:18:34 PM
ohh thinkkuren next time ipdi aluththam koduka  :D