FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Dharshini on August 28, 2012, 04:55:50 PM

Title: நம் காதல்
Post by: Dharshini on August 28, 2012, 04:55:50 PM
முதல் சந்திப்பில்
கண்களில் தொடங்கி
பெயரை தெரிந்து கொள்ள
ஏங்கும் படபடத்த மனது..

நீ பார்க்காத நேரத்தில்
உன்னைப் பார்த்த என் கண்கள்
நீ யார் என்றே தெரியாமல்
உன் ஆட்டோகிராப்
வாங்கிய நிமிடங்கள்..

முதல் முதலில்
தொலைபேசியில்
ஹலோ கேட்டதும்
கண்டுபிடித்துவிட்டதால்
துடிதுடித்த இதயம்.

பேசி பழகி ஒருவரை
ஒருவர் புரிந்தும்
சேரமுடியாமல்
தவித்த நிலை..

வருடங்கள் கடந்தாலும்
இன்றும் ஏதோ சந்தர்ப்பத்தில்
உன்னை நினைவுப்படுத்தும்
சில இனிமையான நேரங்கள்..

உயிர் உள்ளவரை
உன் நினைவை தாங்கும்
சுகமான வலியும் இருக்கும்
என்னிடம் ...உன்னிலும்
இருந்தால் எங்கே இருந்தாலும்
நம்மை இணைக்கும் நம் காதல்..
Title: Re: நம் காதல்
Post by: ஆதி on August 28, 2012, 05:09:50 PM
நல்லா இருக்குங்க கவிதை, அது என்னா ஒரே நம் காதலா இருக்கு
Title: Re: நம் காதல்
Post by: Dharshini on August 28, 2012, 07:39:11 PM
haha aathi ore nam kadhal nu heading illaiye nam kadhal nu matum thane iruku mokkai joke sirika soli kashta padutha maten any way thz 8)
Title: Re: நம் காதல்
Post by: Thavi on August 29, 2012, 02:38:16 AM
Dharshini ரெம்ப அருமையா இருக்கு உன் கவிதை மச்சி தொடர்ந்து எழுத என்னுடைய வாழ்த்துகள் 
Title: Re: நம் காதல்
Post by: Anu on August 29, 2012, 06:18:15 AM
Very Nice kavithai dharshini ma  :-*