FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 28, 2012, 04:44:51 PM
-
அழியாமல் என்னுள்
ஒட்டி இருக்கிறது
உயிர் மாதிரி
உன் ஞாபகங்களும்..
எதிர்பாராத வினாடிகளில்
என்னையும் மீறி
ஏதாவது திசையில்
தலை நீட்டிவிடிகின்றன
பழைய சம்பவங்கள் எல்லாம்..
எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?
யாப்புப் போல நீ
வார்த்தைகளின் ஊடே
வசப்படாமல் போனாலும்
எழுத தகிக்கிற
ஏக்கமாயாவது நெஞ்சுக்குள் இரு..
கடவுளும் காதலித்ததை
உன்னைக் கண்டப் பிறகே
உணர்ந்தேன்..
மாற்றப் பட்டேனா..
மாற்றமுற்றேனா..
தெரியவில்லை ?
ஒவ்வொரு வினாடியிலும்
ஒரு பருவ மாற்றம்
நிகழ்கிறது..
வண்ண தாஜ்மகால்
உனை நோக்கி
என் எண்ண யமுனைத்
திரும்புகிறது..
தண்ணீரில் விழுந்த
கீறல் போல்
எதுவும் புலப்படாதவளாய் நீ..
பிள்ளையார் சுழிப் போற்
புரியாத எழுத்தா
என் காதல் ?
-
ஹஹா ... பிள்ளையார் என்று ஆரம்பிதமையல் அவரை போல் காதல் கல்யாணம் எல்லாம் கை கூடாது போகிறது போல .. கண்ணன் என்று ஆரம்பித்து பாருங்கள் கோபியர் கூட்டத்தில் ராதை மிளிர்ந்தாலும் மிளிருவாள் ... உங்கள் கவிதைகளில் இளகிய இலக்கான நடை பார்த்து வியக்காமல் இருக்க முடியவில்லை ...
எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?
மிகவும் அருமை ....
-
ரொம்ப நன்றிங்க, காதல் கவிதை மென்மையையாக இருக்க வேண்டும் என்பதில் மட்டும் எப்போதும் ரொம்ப கவனமாய் இருப்பேன்
மென்மையான கவிதைகளில் இருக்குற சுகமே அலாதிதான்
சில கவிதைகள் நண்பர்களுக்காக எழுதியது
சில நண்பர்களின் காதல் கதையை கேட்டு எழுதியது
-
எதிர்பாராத வினாடிகளில்
என்னையும் மீறி
ஏதாவது திசையில்
தலை நீட்டிவிடிகின்றன
பழைய சம்பவங்கள் எல்லாம்..
எனக்குள் இருந்தவாறு
உன்னையே எண்ணுகிற என்னை
உனக்குள் இருந்தவாறு
நீ எண்ணிப் பார்த்திருகிறாயோ
இல்லையோ ?
arumaiyaana varigal aadhi .
nandri pagirndamaiku :)
-
நன்றி அனு