FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 28, 2012, 12:46:03 PM

Title: நம் காதல்
Post by: Global Angel on August 28, 2012, 12:46:03 PM
தொலையாத இரவிலும்
தொலைகின்ற நினைவிலும்
தொடராய் தொலைகிறது - என் காதல்


பால் நிலவும் பருவத்து அடிமை
பகல் நிலவு இவளும்
பருவத்து காதலுக்கு அடிமை
தினம் ஒரு பார்வையில்
தித்திக்கும் நினைவு
தீப்பற்றி கொள்ள  வாழ்கிறது -நம் காதல்


முத்தமிட்டு செல்லும் -உன்
மூச்சு காற்றை சுமந்த
தென்றல் சொல்கிறது நீ
சுமக்கும் நம் காதலை ...


நீ சிந்தும் சிரிப்பில்
சிதறி தவிக்கிறது என் மோகம்
பற்றிக்  கொள்ள பலதடவை  ஏங்கினாலும்
சில முகத்திருப்பலில் முழுமை அடைகிறது மோகம்..
 
Title: Re: நம் காதல்
Post by: ஆதி on August 28, 2012, 01:33:25 PM
//தொலையாத இரவிலும்
தொலைகின்ற நினைவிலும்
தொடராய் தொலைகிறது - என் காதல் //

தொலையாத இரவு, நொடிகள் நகராமல் ஸ்தம்பித்திருக்கும் ஒரு தனிமையான இரவில்

தொலைகின்ற நினைவில், ஆட்கொண்டு தன்னை இழக்கவைக்கிற நினைவில்

தொடராய் தொலைகிறது ‍ என் காதல் = நீண்டு இன்னும் நெடியாதாய் பெருக்கெடுக்கிறது காதல்

நல்ல துவக்கம்

//பால் நிலவும் பருவத்து அடிமை
பகல் நிலவு இவளும்
பருவத்து காதலுக்கு அடிமை
தினம் ஒரு பார்வையில்
தித்திக்கும் நினைவு
தீப்பற்றி கொள்ள  வாழ்கிறது -நம் காதல் //

பால் நிலவு பகல் நிலவு ரசித்தேன்


//முத்தமிட்டு செல்லும் -உன்
மூச்சு காற்றை சுமந்த
தென்றல் சொல்கிறது நீ
சுமக்கும் நம் காதலை ...//

அந்த தென்றல் எத்தொடுவுணர்வுடையதாக இருக்கும் யோசித்து பார்க்கிறேன்

வெப்பமாகவா, கொஞ்சம் நாணம் தோய்ந்ததாகவா, குளிர்வெம்மை கொண்டாகவா, ஏக்கமானதாகவா, தவிப்போடதாகவா, தத்தளிப்புடையதாகவா ?


//நீ சிந்தும் சிரிப்பில்
சிதறி தவிக்கிறது என் மோகம்
பற்றிக்  கொள்ள பலதடவை  ஏங்கினாலும்
சில முகத்திருப்பலில் முழுமை அடைகிறது மோகம்.. //


முகத்திருப்பல் என்பது பெரும்பாலும் கோவத்தையே குறிக்கும், ஆனால் இங்கு திரிசனம் எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பது மிக சிறப்பு

ரம்மியமான காதல்ரசம் வழியும் ரசனை மிகு கவிதை வாழ்த்துக்கள்
Title: Re: நம் காதல்
Post by: Global Angel on August 28, 2012, 01:48:06 PM
 அடடா ... என் கவிதைக்கு இவ்ளோ அழகான விளக்கமா ... நன்றி நன்றி ...இதுதான் பிரிச்சு மேயுறது என்றது போல ... ஹிஹி
Title: Re: நம் காதல்
Post by: ஆதி on August 28, 2012, 01:51:01 PM
எனக்கு கவிதைகளை பிரித்து மேய்வது ரொம்ப பிடிக்குமுங்க :)
Title: Re: நம் காதல்
Post by: Global Angel on August 28, 2012, 01:57:45 PM


தெரீது ...கவிதை பித்தரகவே ... ஹிஹி