FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 28, 2012, 12:43:44 AM
-
எதிர்வீட்டு முற்றத்தில் விழுகின்ற
இன்நிழலே; இதயத்து அடிப்பரப்பில்
உதிர்கின்ற மலர்சுணையே; எதற்காக
உன்நினைவால் வாட்டுகிறாய் என்னை ?
அதிர்வேட்டு மௌனத்தில் வார்த்தைகளை
அடக்கிவிட்டு; பெரும்பாலும் புன்னகையில்
புதிர்ப்போட்டு போகின்றாய்; அடி,எப்படி
பொருள் கொள்ள உன்னை ?
கடிகார முட்கடந்து கசிகின்ற
கணங்களை, கைப்பற்றி, நெஞ்ச
அடிவாரத்தில் அழகழகாய் விண்மீன்போல்
அடுக்கிவைத்தேன் உன்னோடிருந் த,ஞாபகமாய்...
அடிப்பாதம் எடுத்து வந்து,உன்
ஆசைகள் அத்தனையும் நீசொல்லி
முடிப்பதற்குள் நம்பெற்றவரின் காதுகளில்
முழங்கிவிட்டான் எவனோ பாதகமாய்..
வெட்கத்தில் நீஎழுதிய வெண்பா
வெறும்பாட் டானதடி; விழியோர
முட்துளியை தூறிப் போன
முகிலே!என் மேலென்ன வெறுப்பா ?
துட்ட கனவையெலாம் நிறம்நிறமாய்
தூவி, வீசினாயே தூக்கமற்ற
வெட்டவெளியில்; எதைப்பருகி என்காதல்
விரக்தி ஆற்ற,எரி நெருப்பா ?
-
ஒரு பிரிவின் வலி ,வலிக்க வலிக்க சொல்லி இருகின்றீர்கள் .. அருமை
காலம் எனும் கடலில் மிதக்கும்
நினைவு எனும் அமிர்தம் உண்...
முட்படுக்கயிலும்
முத்தத்தின் சுகம் உணர்வாய் ..
hehe
-
:D :D :D
நன்றிங்க, உங்க கவிதை நல்லா இருக்கு
-
;D thanks