FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on August 10, 2011, 06:58:28 AM

Title: உடல் இடையை குறைக்க வேண்டுமா?
Post by: Yousuf on August 10, 2011, 06:58:28 AM
காலைச் சிற்றுண்டியுடன் பழச்சாறு குடிப்பதற்கு பதில் கொழுப்பு நீக்கப்பட்ட பால் குடித்தால் மதிய உணவின் போது சாப்பிடும் அளவில் 9சதவீதம் குறையும் என்கிறது ஆஸ்திரேலிய ஆய்வுத் தகவல். இத்தகைய முறையால் உணவின் அளவு குறைவதுடன் நாம் எடுத்துக் கொள்ளும் கலோரி அளவும் குறைவதால் உடலின் எடை குறைய வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

பழச்சாறு பசியைத் தூண்டும் என்பதால் பசி சீக்கிரம் எடுக்கும் என்பது மட்டும் அல்ல,உணவின் அளவும் அதிகமாகும் இதனால் கலோரிகளின் அளவு அதிகரித்து உடல் எடை குறைய மறுக்கும் என்பதும் விஞ்ஞானிகளின் அறிவுரை.இந்த ஆய்வுக்காக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் குழு அதிக உடல் எடை கொண்ட ஆனால் ஆரோக்கியமான சுமார் 34ஆண் மற்றும் பெண்களை எடுத்துக் கொண்டது.

இவர்கள் 2 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒரு குழுவினருக்கு சிற்றுண்டியின் போது கொழுப்பு நீக்கப்பட்ட பாலும், மற்றொரு பிரிவினருக்கு பழச்சாறும் கொடுத்து 4 மணிநேர இடைவெளியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் குறைந்த அளவே புரதம் மற்றும் லாக்டோஸ் சத்துக்கள் இருப்பதும், அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்வதும் தடை செய்யப்படுகிறது.

ஆனால் அதன் இதர சத்துக்கள் உடலில் சேர்ந்து மூளைச் செயல்திறனை அதிகரித்து ‘போதும் என்ற மனநிறைவைக் கொடுப்பதால் பசிக்கும் உணர்வு தள்ளிப் போகிறது, குறைவான உணவும் எடுத்துக்கொள்ள ஏதுவாகிறது.அதனால் உடல் எடை எளிதில் குறைய வகை செய்கிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
Title: Re: உடல் இடையை குறைக்க வேண்டுமா?
Post by: Global Angel on August 10, 2011, 01:25:06 PM
oh ::) ::) ::) ::) ::) ::)