FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 27, 2012, 04:51:56 PM

Title: புல்லாங்குழல்
Post by: ஆதி on August 27, 2012, 04:51:56 PM
துளை துளையாய் கசிந்து
இழை இழையாய் எமது
இறுக்கத்தை களைய
எங்கு கற்றாய் ?

வறுமை சூரியன்
வயிற்றை சுடுகையிலும்
குளுமையை இதழ்களில்
குழுமிட வைக்க
உனக்கே இயல்கிறது..

கண்ணீர் முட்டி
கரையுடைகிற கண்களில்
உறக்கத்தை ஊட்டி
இமைகளை பூட்ட
உனக்கே தெரிகிறது..

உடைப்பை திறந்து
உனது வெள்ளம் பாய்கையில்
இழப்பே நிவாரணமாகிறது..

உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

காதலன் விரல் தொடும் போது
கண்மூடும் பெண்ணை போல
நீ வருடும் போது
மூடிவிடுகின்றன எம்
புலன்களின் இமைகள்..

உன்னை
தடுப்பு போட்டு
தனிமையில் தேங்கையில்
விடுப்பு போட்டு
வெளியேறுகிறது விரக்தி..

பெண்ணோடு உதடு ஒட்டையில்
பேரின்ப சுவர்கள் திறந்திடும்
உன்னோடு உதடு ஒட்டையில்
உறைந்த நாளங்கள் எழுந்திடும்..
Title: Re: புல்லாங்குழல்
Post by: Global Angel on August 27, 2012, 05:16:09 PM
Quote
உன் துளை திரியில்
இசைதீ ஏற்றபடுகையில்
மெழுகாய் உருகி கரைகிறது
மென்மையற்ற இதயங்களும்..

ஹஹா ... ஆதி நிஜமாகவே கவிதிறமை வாய்ந்தவர் நீங்கள் ... மிகவும்  அருமையான நிகழ்வு பதிவுகளை கவிதையாக்கி கொடுகின்றீர்கள் ...இசை என்றாலே மயங்காத நெஞ்சம் உண்டா .. அதிலும் புல்லங்குழல் அதற்க்கு மயங்காதவர் உண்டா ... உவமான உவமேயங்கள் உதாரணங்கள் அருமை  அருமை ..
Title: Re: புல்லாங்குழல்
Post by: ஆதி on August 27, 2012, 05:30:44 PM
புல்லாங்குழலை காட்டிலும் வீனை இன்னும் அற்புதமான வாச்சியம், எனினும் வினையைவிட எனக்கு சிதார் மீது ப்ரியம் அதிகம், 22 தந்திகளையும் லேசாக ஒரு வருடு வருடினால் எழும் லயத்தில் அப்படியே உயிர் முழுக்க கொட்டிவிடும்

அது போல் அயலினும், hindustani இசையில் இசைக்கப்படும் சாரங்கியு மிக ப்ரியம் எனக்கு

வாழ்த்துக்களுக்கு நன்றி