FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 26, 2012, 10:52:43 AM

Title: புரியாத கவிதையை போல நீயும்
Post by: ஆதி on August 26, 2012, 10:52:43 AM
புரியாத கவிதையை போல
ஆழ்ந்து மீண்டும் மீண்டும்
உன்னை வாசிக்கிறேன்

சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்

உன் அபிப்ராயங்களை
ஊகிக்க முயலும் என் எண்ணங்கள்
அக்கவிதையிலுள்ள இருண்மையான வார்த்தைகளை போல
வரிசையாகவும், தனித்தனியாகவும்
குழுகுழுவாகவும், கூட்டுத்தொடராகவும்
ஊர்ந்திருக்கின்றன

கவிதை நெடுக திரியும்
நிச்சலனம் உன் முகரூபம் கொண்டிருக்கிறது

உன் விழிகளின் பார்வையும்
உதடுகளின் புன்னகையும்
புதிர் விலகா குறியீடுகளை போல
அரூப காட்டில் தள்ளி
மீள இலயலா தவிப்பில் என்னை தொலைக்கின்றன..

வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ

புரியாமலும்.....
Title: Re: புரியாத கவிதையை போல நீயும்
Post by: Global Angel on August 26, 2012, 03:11:16 PM
Quote
சொற்களின் இண்டுகளில்
மிக கமுக்கமாய் உலவும் அர்த்தத்தை போல
புலப்படாமல் இருக்கின்றன
என் மீது நீ வைத்திருக்கும் அபிப்ராயங்கள்

வாக்கியமும் வார்த்தையும்
குறியீடும் படிமமும்
முன்னும் பின்னும்
கீழும் மேலும்
இடம் பெயராமல் இருப்பதை போன்று
மனதுக்குள் எம்மாற்றமுமில்லாமல் இருக்கிறாய் நீ



தமிழை உருவகித்து உவமித்து ஒரு அருமையான காதல் கவிதை கொடுத்திருக்கின்றீர்கள் ஆதி நன்று ... உங்கள்  ஓவியம் உயிராகிறது கவிதையும் மிகவும் அருமை  முதுமையிலும் முற்று பெறாத  காதல் ..
Title: Re: புரியாத கவிதையை போல நீயும்
Post by: ஆதி on August 26, 2012, 03:24:33 PM
நன்றி குளோபல் ஏஞ்சல்

இதே கவிதையை இறைவனை புரிந்து கொள்ள முயலும் சாமனீயன் பாடலாக பாருங்கள் ஒரு கோணம் கிடைக்கும்

புத்த தத்துவங்களை பயில முயலும் ஒருவனின் சிந்தனையாக பாருங்கள் இன்னொரு திசை திறக்கும்

நட்பின் கவிதையாக பாருங்கள் புது வெளி விரியும்

ஒரு கவிதைதான் கோணமும் திசையும் வெளியும் பல‌

கவிதைகளை எப்படி திறப்பது எனும் கட்டுரை எழுத எண்ணமுண்டு எந்த பகுதியில் துவங்குவதென தெரியவில்லை, உதவினால் விரைவில் துவங்குவேன், நன்றி
Title: Re: புரியாத கவிதையை போல நீயும்
Post by: Global Angel on August 26, 2012, 03:36:44 PM
கவிதை சமந்தமான தகவல்கள் கவிதை எழுதுபவர்களுக்கு பயன்பட கூடியது  என்றால் இங்கேயே அதை பிரசுரம் செய்யுங்கள் ... அதை பிரதான படுத்தி வைக்கலாம் முதல் பக்கத்திலேயே ...