FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 24, 2012, 06:20:27 PM

Title: ~ எலுமிச்சை--பழங்களின் பயன்கள் !!! ~
Post by: MysteRy on August 24, 2012, 06:20:27 PM
எலுமிச்சை--பழங்களின் பயன்கள் !!!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa8.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F405336_279043688867805_1423076733_n.jpg&hash=89f962e8302e15de46d9e336823f4c3f1bcfc339) (http://www.friendstamilchat.com)


காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.

வெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.

இதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.

உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.

எலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.

எனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.