FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:51:13 PM
-
தம்பதிகள் விவாகரத்து பெறுவது என உறுதியாக முடிவு செய்த பின்னர், அந்த மனுவை குறிப்பிட்ட நாளில் தாக்கல் செய்வது எதிர்பார்க்கும் பலனைத் தரும். குறிப்பாக சனி ஓரை, செவ்வாய் ஓரைகளில் விவகாரத்து மனுவை தாக்கல் செய்யலாம்.
அதேபோல் 6வது வீட்டில் பாவ கிரகங்கள் இருக்கும் போதும், சந்திரன் இருக்கும் போதும் விவாகரத்து மனுவில் கையெழுத்திடுவதும், அன்றைய தினத்தில் மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதும் விரைவாக விவாகரத்து பெற உதவும்.
ஜாதகருக்கு என்ன தசா புக்தி நடக்கிறது என்பதைப் பார்த்து விட்டு அதற்கு தகுந்தது போல் வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். உதாரணமாக மூத்த வழக்கறிஞரிடம் வழக்கை அளித்தால் உடனடிப் பலன் கிடைக்குமா? அல்லது இளம் வழக்கறிஞரிடம் சென்றால் விரைவாக விவாகரத்து கிடைக்குமா? என்பதைக் கூட கணித்து விட முடியும்.
ஒரு சிலருக்கு பெண் வழக்கறிஞர் வாதாடினால் நிச்சயமான பலன்கள் கிடைக்கும் என்று கூறுகிறோம். அவர்களது ஜாதகத்தில் சில கிரகங்கள் சிறப்பாக இல்லாததால் இப்படிக் கூறுவோம். அவர்கள் ஆண் வழக்கறிஞரிடம் சென்றால் நீண்ட இழுபறிக்கு பின்னரே விவாகரத்து கிடைக்கும். இதற்கு பெண் ஆதிக்க கிரகங்களின் தன்மையை ஆராய வேண்டும்.