FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:13:02 PM
-
வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. பணிக்குச் சென்று விடுவதால் முக்கிய விரதங்கங்களை அவர்களால் மேற்கொள்ள முடியாமல் போகிறது. இதுபோன்ற நேரத்தில் அந்த விரதத்தின் பலனை அடைய என்ன பரிகாரம் செய்யலாம்?
பதில்: பொதுவாக விரதங்கள் என்பது திதி, நட்சத்திரம், நாள் அடிப்படையில்தான் கடைப்பிடிக்கப்படுகிறது. உதாரணமாக சங்கடஹர சதுர்த்தி என்றால் சதுர்த்தி திதி இருக்கும் வரைக்கும் மட்டுமே கொண்டாடப்படும்.
கந்த சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள், சஷ்டி திதி இருக்கும் காலத்தில் விரதத்தை மேற்கொள்ள வேண்டும். கோகுல அஷ்டமி என்றால் அஷ்டமி திதி இருக்கும் காலத்தில் பூஜை செய்ய வேண்டும்.
மேலும் சில பண்டிகைகள் நட்சத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றன. உதாரணமாக வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், மாசி மகம் ஆகியவை குறிப்பிட்ட நட்சத்திரங்களை மையமாகக் கொண்டவை.
எனவே, குறிப்பிட்ட தினத்தில் விரதம்/பூஜை மேற்கொள்ள நினைக்கும் பெண்கள் காலையில் சீக்கிரம் எழுந்து அனைத்தையும் செய்யலாம் அல்லது அலுவலகத்திற்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய பின்னர் மீண்டும் குளித்து விட்டு, விளக்கேற்றி பூஜைகள் மேற்கொள்ளலாம். இதில் தவறில்லை.
ஆனால் விரதம், பூஜை செய்ய வேண்டிய நாட்களில் செய்யாமல் அவற்றை ஓரிரு நாட்கள் தள்ளி விடுமுறை நாளில் செய்வதில் பலனில்லை.
ஒருவேளை காலையில் பூஜை செய்யும் போது முக்கிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்களை கூற முடியாத பட்சத்தில், பூஜையை வீட்டில் முடித்து விட்டு, வாகனத்தில் செல்லும் போது இறைவனை நினைத்து அந்த மந்திரங்களை மனதிற்குள் ஜெபிக்கலாம். இதற்கும் உரிய பலன் கிடைக்கும்.