FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 22, 2012, 05:05:45 PM
-
வாகனத்தில் பயணிக்கும் போது பன்றியின் மீது மோதிவிட்டால், அந்த வாகனத்தை உடனடியாக விற்றுவிட வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். அப்படி இல்லாவிட்டால் அந்த வாகனத்தால் விபத்து ஏற்படும் என்றும் அச்சுறுத்துகின்றனர். ஒருவேளை வாகனத்தை விற்பதாக வைத்துக் கொண்டாலும், அதனை வாங்குபவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாதா?
பதில்: ஒவ்வொரு உயிரினத்திற்கும் இயற்கையை அறிந்து கொள்ளும் தனித்தன்மை உள்ளது. இது உயிரினத்திற்கு உயிரினம் மாறுபடும். பட்சி சாஸ்திரத்தில் இதுபற்றி தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
உதாரணமாக, பூனை வலமிருந்து இடப்பக்கமாகப் போனால் நல்ல சகுனம். ஆனால் ஒரு பூனை இடமிருந்து வலப்பக்கம் போனால் காரியத்தடை ஏற்படும். எனவே, மேற்கொள்ள உள்ள காரியத்திற்கு தேவையானவற்றை பயணத்தின் போது எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர குறிப்பிட்ட காரியத்தை நிறுத்த வேண்டிய அவசியமில்லை.
பூமியைத் தோண்டி அதிலுள்ள கிழங்கு வகைகளை சாப்பிடும் உயிரினமாக பன்றி திகழ்கிறது. அந்த வகையில் புதைந்து கிடக்கக் கூடிய விஷயங்களை வெளிக்கொண்டு வரும் சக்தி பன்றிக்கு உள்ளதாக நம்பப்படுகிறது.
வாகனத்தின் மீது பன்றி மோதினாலும், பன்றியின் மீது வாகனம் மோதினாலும் அந்த வாகனத்திற்கு பெரிய விபத்து காத்திருக்கிறது என்று பன்றி நமக்கு உணர்த்துகிறது. எனவே அந்த வாகனத்தில் பயணம் செய்வதை தவிர்க்கலாம். அதனை மற்றொருவருக்கு விற்றுவிடுவது நல்லது.
விற்பனை செய்யப்பட்ட வாகனம் அதன் புதிய உரிமையாளருக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனென்றால், விற்றவரின் ஜாதக அமைப்பும், வாங்கியவரின் ஜாதக அமைப்பும் ஒன்றாக இருக்காது. வாகனம் வாங்க வேண்டும் என்ற அமைப்பு இருப்பவர்களே அந்த வாகனத்தை வாங்குவார்கள் என்பது ஜோதிட ரீதியான உண்மை