FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: Yousuf on August 09, 2011, 04:09:47 PM
-
கடல் பாசி அல்லது கடல் பூண்டுகளை பாலில் கலந்து குடிப்பதன் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆரோக்கியமான முறையில் உடல் மெலிவடைய இது ஓர் நல்ல முறையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சொக்கலேட் கலந்த பாலில் இதைக் கலந்து குடிப்பதன் மூலம் பசியைக் அடக்க முடியும்.
காலையில் இதை அருந்தும் பழக்கம் உள்ள ஆண், பெண் அகிய இரு பாலாருள் மூன்றில் ஒருவர் பகல் நேரம் ஆகின்ற போது, ஏனையவர்களை விட பசி உணர்வு குறைந்தவர்களாகவே காணப்பட்டனர்.
உடல்பருமன் தொடர்பான ஒ.பே.சி.டி என்ற மருத்துவ இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இத்தகைய பானத்தை அருந்துவதன் மூலம் இடையில் நொருக்குத் தீனிகளும் தேவைப்படாது.
உடல் பருமனைக் குறைப்பதற்கு இவ்வாறான ஆரோக்கியமான வழிமுறைகள் பல உள்ளன. ஆனால் அவற்றை யாரும் பின்பற்றாமல் இருப்பது தான் பிரதான பிரச்சினை என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கடல் பூன்டுகள்க்கு எங்க போறது ... ::)
-
கடல் பாசி கிடைக்குமே அதை பயன் படுத்தலாமே...!!!
-
கடல்பாசி எல்லா கடைகளிலும் கிடைக்க கூடியதா என்று தெரியவில்லை . அதிகபடியா உடம்பு இருக்கிறவங்க இதை பயன்படுத்துவது பயனுல்லதா இருக்கும் . நல்ல தகவல் யூசுப்.