FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 22, 2012, 02:32:11 PM

Title: குதிகால் வெடிப்பு அழகை கெடுக்குதா? வீட்டிலேயே சரிசெய்யலாம்...
Post by: kanmani on August 22, 2012, 02:32:11 PM
கால்களில் பெரும்பாலும் வரும் பிரச்சனை குதிகால் வெடிப்பு. அந்த குதிகால் வெடிப்பு வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு அதிகம் வரும். மேலும் இந்த வெடிப்பு அதிகம் நடப்பவர்களுக்கும், எடை அதிகம் உள்ளவர்களுக்கும் வரும். அப்படி வரும் போது நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே அதனை சரிசெய்ய முடியும்.

குதிகால் வெடிப்பைப் போக்க...

1. படுப்பதற்கு முன் சற்று வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு 56 நிமிடங்கள் பாதங்களை அதில் ஊற விட்டு, பின் எண்ணெய்யை பூசி படுக்க வேண்டும்.

2. வெதுவெதுப்பான தண்ணீரில் சிறிது கெமிக்கல் அதிகம் இல்லாத ஷாம்புவை ஊற்றி, அதில் பாதங்களை சிறிது நேரம் ஊற வைக்கவும். பின் மெருகேற்ற உதவும் ஒரு வகை மாக்கல்லை வைத்து தேய்த்தால், குதிகாலில் இருக்கும் அழுக்குகள் நீங்கி அழகோடும், மென்மையோடும் காணப்படும். மறக்காமல் எண்ணெய்யை பூச வேண்டும்.

3. தேனும் பாதங்களை அழகாக்க உதவும் ஒரு வகையான சிறந்த மருந்தாகும். மிதமான சூடு உள்ள தண்ணீரில் சிறிது தேன் மற்றும் எலுமிச்சைப்பழச் சாற்றை விட்டு அதில் 8 10 நிமிடங்கள் பாதங்களை ஊற விடவும். பின் பாதங்களை கழுவி, காய்ந்ததும், சிறிது ஆலிவ் எண்ணெய்யைத் தடவ வேண்டும். இதனால் வெடிப்புகள் குறைந்து அழகாகக் காணப்படும்.

4. பேக்கிங் சோடாவை வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து பாதங்களை ஊற வைத்து கழுவினால், பாதங்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை நீக்கி பாதங்களுக்கு மென்மையையும், அழகையும் தரும். இதனை வாரத்திற்கு 2 முறை செய்தால் பாதங்கள் பொலிவோடு காணப்படும்.

5. வறண்ட சருமம் உள்ளவர்களுக்கே பொதுவாக குதிகால் வெடிப்பு வரும். அவர்கள் தினமும் குளிப்பதற்கு முன் மெருகேற்ற உதவும் ஒரு வகை மாக்கல்லை வைத்து தேய்த்து பின் குளிக்க வேண்டும். குளித்தப் பின்னும், படுப்பதற்கு முன்னும் எண்ணெய்யை பூச வேண்டும்.

செய்யக்கூடியவை... செய்யக்கூடாதவை...

1. சருமம் வறண்டு இருக்கிறது என்று பாதங்களில் ரேஸரை பயன்படுத்தக் கூடாது. இதனால் ஏதாவது நோய் அல்லது ரத்தம் வடிதல் போன்றவை வரக்கூடும்.

2. எப்போதும் காலனியை அணிந்து இருக்க வேண்டும். தினமும் பாதங்களை சுத்தம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் குதிகால் வெடிப்பு இல்லாமல், பாதங்கள் பொன் போல் மிளிரும்.