FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 22, 2012, 02:30:47 PM

Title: கண்கள் பொலிவாக இருக்கணுமா? இதைப் படிங்க!
Post by: kanmani on August 22, 2012, 02:30:47 PM
கண்கள் சோர்வாக இருந்தால் முகமே களை இழந்து விடும். எனவே கண்களை குளிர்ச்சியாக வைத்திருந்தாலே போதும் பொலிவாகவும் பளபளப்பாகவும் இருக்கும். கண்களை பாதுகாக்க அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.

தூக்கம் கெட்டாலே கண்களை சுற்றி கருவளையும் தோன்றும். எனவே இரவு நேரங்களில் அதிகம் டிவி, நெட் பார்க்காமல் கண்களுக்கு ரெஸ்ட் கொடுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

கண்கருவளையம் நீங்க சந்தனக்கல்லில் சாதிக்காயை அரைத்து பூசிவந்தால் கருவளையம் விரைவில் மறையும். நந்தியாவட்டை பூவை நீரில் கழுவி வெள்ளைத் துணியில் சுற்றி கண்களின் மேல் வைத்து கட்டிவர கண்கள் பிரகாசமாகும். அவ்வாறு இயலாதவர்கள் பறித்த பூவை தண்ணீரில் கழுவி கண்ணின் மேல் ஒற்றியெடுக்க கண்கள் குளிர்ச்சியடைந்து பிரகாசமாகும். வெண்ணெயுடன் கொத்தமல்லி சாற்றைக் கலந்து கண்களுக்கு பேக் போட கண்கள் கருவளையம் நீங்கி பிரகாசமாக இருக்கும்.

பாதம் பருப்புகளை பாலுடன் சேர்த்து ஊறவைத்து அரைத்து கண்களைச்சுற்றி பேக் போடுவதால் கண்ணின் கருவளையம் மறையும்.வெள்ளரிக்காயை அரைத்தோ அல்லது வட்டமாக நறுக்கியோ கண்களின் மீதும் கண்களைச்சுற்றியும் பேக்போட்டு வர கண்ணிற்கு குளிர்ச்சியைத்தரும்.

கண்கள் பளபளப்பாகவும் பொலிவுடனும் இருக்க தினமும் இரவில் கண் இமைகளில் விளக்கெண்ணெயை ஒன்று அல்லது இரண்டு சொட்டுகள் விட்டுவர வேண்டும். திரிபலா சூரணத்தை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒருகப் நீரில் இரவே கலந்து அந்த நீரைக் கொண்டு காலையில் கண்களைக் கழுவினால் கண்கள் நன்றாக ஒளிவீசும்.

உடல் சூட்டினால் ஏற்படும் கண் எரிச்சல் மற்றும் கண் சிவப்பு இவற்றிற்கு கருஞ்சீரகம் 100 கிராம் நல்லெண்ணெயை கண்ணின் மேலும், கண்ணைச் சுற்றியும் தேய்த்து கழுவினால் கண்எரிச்சலும் சிகப்பும் மாறும்.

தினமும் காலையில் எழுந்தவுடன் உள்ளங்கைகளைக் கொண்டு கண்களை மூடிக்கொண்டு கண்களை இடது வலதாக மேலும் கீழுமாக சுற்ற வேண்டும். இவ்வாறு 5-6 முறை செய்யவும். கண்களை இறுக்கமாக மூடித்திறக்க வேண்டும். இவ்வாறு 5 முறை செய்ய வேண்டும். இது கண்களுக்கு ஏற்ற சிறந்த எக்ஸர்சைஸ் என்கின்றனர் நிபுணர்கள்.