FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 22, 2012, 02:16:05 PM

Title: கூந்தலை வீட்டிலேயே அடிக்கடி ரிலாக்ஸ் பண்ணுங்க!!!
Post by: kanmani on August 22, 2012, 02:16:05 PM
முகத்திற்கு அழகைத் தருவதில் ஒன்றாக இருக்கும் கூந்தலை அழகுப்படுத்தவும், சரியாக பராமரிக்கவும் கடைகளில் விற்கும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் கூந்தல் உதிர்தல் ஏற்படுவதோடு, அதிக டென்சன் காரணமாகவும் கூந்தல் உதிர்கிறது. அதுமட்டுமல்லாமல் கூந்தல் நேராக மாற்ற மேற்கொள்ளும் சிகிச்சையின் மூலம் எவ்வளவுதான் சரியான ரிலாக்ஸ் கிடைத்தாலும், கூந்தல் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது. ஆகவே கூந்தலை ரிலாக்ஸ் செய்து நேராகவும், ஆரோக்கியமாகவும் வளர்க்க ஒரு சில இயற்கையான வழிகள் இருக்கின்றன.

ஆமணக்கெண்ணெய் மசாஜ் : ரிலாக்ஸ் என்று சொன்னலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது, மசாஜ் தான். இவ்வாறு மசாஜ் செய்தால் கூந்தல் வேர்கள் எந்த பாதிப்பும் அடையாமல், ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் இந்த மசாஜிற்கு ஆமணக்கெண்ணெயை பயன்படுத்தி ஸ்கால்ப் மற்றும் முடியின் நீளம் முழுவதும் தடவ வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருக்கும் தசைகள் நன்கு ரிலாக்ஸ் ஆவதோடு, முடியின் அடர்த்தியும் கூடும். அதிலும் இந்த மசாஜை இரண்டு வாரத்திற்கு ஒரு முறை செய்தால் கூந்தல் ஆரோக்கியமாக நன்கு பளபளப்போடு வளர்வதோடு, நேராகவும் வளரும்.

தேங்காய் பால் & எலுமிச்சை சாறு : முதலில் தேங்காய் பால் மற்றும் எலுமிச்சை சாற்றை கலந்து ஸ்கால்ப்பிற்கு மற்றும் கூந்தலுக்குத் தடவி, ஈரத்துணியால் கட்டி ஒரு மணிநேரம் கழித்து கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து மாதத்திற்கு மூன்று நாட்கள் செய்து வந்தால், கூந்தல் நன்கு ஆரோக்கியமாக, நீளமாக வளரும்.

பால் : விரைவில் ஒரு நல்ல ரிலாக்ஸ் கூந்தலுக்கு வேண்டுமென்றால், அதற்கு பால் மற்றும் தண்ணீரை சம அளவில் எடுத்துக் கொண்டு, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, கூந்தலில் தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும் போது, அந்த கலவையானது ஸ்கால்ப் மற்றும் கூந்தலில் நன்கு படும்படி தெளிக்க வேண்டும். பின்னர் ஒரு சீப்பால் கூந்தலை சிறிது நேரம் சீவி, காய வைக்க வேண்டும். பிறகு ஷாம்புவால் கூந்தலை அலசிவிடவும். இதனால் கூந்தல் நேராக இருப்பதோடு, அழகாக மின்னும்.

ஆலிவ் ஆயில் மற்றும் முட்டை : இந்த முறையை செய்வது மிகவும் கடினம். ஆனால் மிகவும் பயனுள்ளது. அதனை செய்தால் கூந்தல் நேராக வளருவதோடு, ஒரு நல்ல ரிலாக்ஸ் போன்றும் இருக்கும். அதற்கு மூன்று முட்டையை உடைத்து ஆலிவ் ஆயிலில் ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ளவும். பின் இந்த மாஸ்க்கை தலைக்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின்னர் நன்கு கழுவிட வேண்டும். முட்டை பயன்படுத்துவதால், அந்த வாசனை கூந்தலில் இருந்து போகும் வரை நன்கு அலச வேண்டும்.

இவ்வாறெல்லாம் செய்து கூந்தலை சரியாகவும் முறையாகவும் பராமரித்து வந்தால், நேராக வளர்வதோடு, கூந்தலும் ரிலாக்ஸாக இருக்கும்.