FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: kanmani on August 22, 2012, 02:13:48 PM

Title: தலை அரிப்பு அதிகமா இருக்குதா? இதை படிங்க...
Post by: kanmani on August 22, 2012, 02:13:48 PM
தற்போது அனைவருக்கும் இருக்கும் பிரச்சனைகளில் கூந்தல் பற்றிய பிரச்சனைகள் தான் அதிகம் இருக்கிறது. அதிலும் சருமத்தில் ஏற்படும் வறட்சி தான் பெரும் காரணம். இதனால் கூந்தல் உதிர்ந்து, நாளடைவில் வழுக்கையாகிவிடுகிறது. அதுமட்டுமல்லாமல், இத்தகைய வறட்சி குளிரான நேரத்தில் தான் அதிகம் ஏற்படுகிறது. மேலும் ஏசியில் அதிகம் இருந்தாலும் வறட்சி ஏற்படும். இத்தகைய வறட்சியை போக்க ஒருசில ஈஸியான வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

* முடியின் மயிர் கால்களை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் மற்றும் அழுக்குகள் அதிகமாக இருந்தாலும், தலையில் அரிப்பு ஏற்படும். ஆகவே அத்தகைய அரிப்புள்ள தலைக்கு pH-யின் அளவு 4.5-5.5-விற்கு இடையில் கலந்திருக்கும் ஷாம்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டும். இதனால் ஸ்கால்ப் வறட்சியடையாமல் இருக்கும்.

* தலைக்கு ஹேர் டை மற்றும் மற்ற கெமிக்கல்களை பயன்படுத்தினாலும், அரிப்புகள் ஏற்படும். ஆகவே அதனை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது.

* ஸ்கால்ப் மற்றும் கூந்தல் வறண்டு காணப்படுபவர்கள் எப்போதும் சூடான நீரில் தலையை அலச கூடாது. அதுமட்டுமல்லாமல் ஹேர் ட்ரையரை பயன்படுத்தினாலும், ஸ்கால்ப் வறண்டுவிடும். மேலும் கூந்தலின் முனையில் வெடிப்புகளும் ஏற்படும்.

* வெளியே வெயிலில் செல்லும் போது கூந்தலை துணியால் சுற்றிக் கொண்டு செல்ல வேண்டும். சூரிய வெப்பம் தலையில் படுவதால், தலையில் இருக்கும் எண்ணெய் வறண்டுவிடும். ஆகவே துணியால் சுற்றிக் கொண்டு சென்றால், எந்த ஒரு அழுக்கும் தலையை எட்டிக்கூட பார்க்காது.

* பட்டர் ஒரு சிறந்த எண்ணெய் பசை நிறைந்துள்ள பொருள். ஆகவே இத்தகைய பட்டரை தலையில் தடவினால் வறண்ட சருமம் சுத்தமாக போய்விடும். ஆகவே அந்த பட்டரை ஆலிவ் ஆயிலுடன் கலந்து கூந்தலுக்கு தடவினால், ஆரோக்கியமான கூந்தலோடு, வறட்சியற்ற கூந்தலையும் காணலாம்.

* பொடுகு இருப்பதும் தலையில் அரிப்பு ஏற்படுவதற்கு ஒரு காரணம். ஆகவே அதனை நீக்க வேப்பிலை அல்லது எலுமிச்சை சாற்றை தலையில் பொடுகு உள்ள இடத்தில் தடவி, குளித்தால், பொடுகு போய்விடும்.

* தலையில் பேன்கள் இருந்தால் கூட, அரிப்புகள் ஏற்படும். அத்தகையவற்றை நீக்க புளித்த தயிரை தலைக்கு தடவி ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளித்தால், பேன் போவதோடு, பொடுகும் போய்விடும். பொடுகு போய்விட்டால், பின் அரிப்பு ஏற்படாது.

* வேப்ப எண்ணெயை லாவண்டர் மற்றும் ரோஸ் மேரி எண்ணெயுடன் கலந்து தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்தால், வறட்சி குறைந்து, அரிப்பு நீங்கிவிடும்.

ஆகவே மேற்கூறிய வழிகளில் தலை முடியை பராமரித்து வந்தால், கூந்தல் ஆரோக்கியமாக உதிராமல் வளரும்.