FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: kanmani on August 22, 2012, 01:40:22 PM

Title: 27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் !
Post by: kanmani on August 22, 2012, 01:40:22 PM
27 நட்சத்திரங்களும் - அதிர்ஷ்டம் தரும் தெய்வங்களும் !

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை

      27 நட்சத்திரங்களுக்கு உரிய அதிர்ஷ்டம் தரும் தெய்வங்கள் பற்றி ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளதாவது :

அஸ்வினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி (அஸ்ட புஜம்)

கார்த்திகை - ஸ்ரீ சரஹணபவன் (முருகப் பெருமான்)

ரோகிணி - ஸ்ரீ கிருஷ்ணன். (விஷ்ணு)

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வர் (சிவ பெருமான்)

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (விஷ்ணு)

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (சிவபெருமான்)

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேசன் (நாகம்மாள்)

மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம் - ஸ்ரீ ஆண்டாள் தேவி

உத்திரம் - ஸ்ரீ மகாலக்மி தேவி

ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்

அனுசம் - ஸ்ரீ லக்ஷ்மி நாரயணர்

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் (ஹயக்கிரீவர்)

மூலம் - ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் - ஸ்ரீ வினாயகப் பெருமான்

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் (விஷ்ணு)

அவிட்டம் - ஸ்ரீ அனந்த சயனப் பெருமாள் (விஷ்ணு)

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி - ஸ்ரீ அரங்கநாதன்

அந்தந்த நட்சத்திரக்கு உரியவர்கள் தங்களுக்குரிய தெய்வங்களை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெறலாம் என ஜாதகபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.