FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on August 22, 2012, 02:24:00 AM
-
பூமி கோளத்தின்
புரியாத பகுப்பில்
இனைய முடியாத
சமாந்தரங்கள் நாங்கள்
அதனால் தானோ
ஒவொரு நொடியும்
உன் முகதிருப்பலின்
முகமனோடு நகர்ந்து கொண்டிருகிறது ..
உந்தன் நேசத்தின் ஒளியில்
விட்டில் ஆன என் ஆசைகளெல்லாம்
சிறகு எரிக்கப்பட்டு கருகி சாம்பலாகின்றது
உயிர் துடிப்பை இழந்து ....
என் வாழ்க்கை விளக்கு
உன்னால் பற்றிக்கொண்ட போதும்
கருக்கலின் கறைகளாய்
என் வேதனைகளும் விரக்திகளும்
விழுந்து கிடக்கின்றது
வடுக்களாய் ......
நமக்குள் முக்குளித்த
கனவு பதுமைகள்
கண் விழித்ததும் காணாமல் போனது ...
கானல் நீராய் ...
இருந்தும்
என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
என்றும் காதலோடு ...
-
//என் வெறுமை படிந்த என் இதயத்தில்
வலம் வரும் உன்னை
பற்றி கொள்ள காத்திருகின்றேன்
//
நன்று
இந்த கவிதையை ஈன்னும் கொஞ்சம் செதுக்கி ஏதாவது இதழுக்கு அனுப்பலாம், நல்ல தரமான கவிதை
வாழ்த்துக்கள்
-
nanri aathi inga entha ithalum illai ... migavum nanri :)