-
அட ஆமாயில்ல!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-f97ISYwG3rE%2FUB4nMF7Z5iI%2FAAAAAAAABCA%2FnV9vsfTCw5Y%2Fs1600%2Fada.png&hash=2c0ba52b73ece5567ea0ce91d6f3e173acd234dc)
மூன்று நாட்களில் மாறக்கூடிய ஒரு புதுமை உணர்ச்சிக்கு காதல் என்று பெயரில்லை. அதன் பெயர் பிராந்தி. காதலென்பது தேவலோக வஸ்து.
- பாரதியார்
ஏழைகள் கூட்டத்திலிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள், உயர்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளத் தான் பணக்காரர்களின் பணத்தில் பத்தில் ஒன்பது பங்கு செலவாகிறது.
- டால்ஸ்டாய்
உயர்ந்த பொருள்களையே புகழாதீர்கள். சமவெளிகளும் மலைகளைப் போல நிலைப்பவை.
- பி. எஃப். பெய்லி
நாமே நமக்குச் சொல்ல முடியாததை எவன் நமக்குச் சொல்கிறானோ அவனே விலை மதிக்க முடியாத நண்பனாவான். எமர்சன்
நடத்தை என்பது ஒரு கண்ணாடி. அதில் ஒவ்வொருவரும் தமது பிம்பத்தையே காட்டுகின்றனர். கதே
நாம் இல்லாமல் உண்மையில் இந்த உலகம் இயங்க முடியும். ஆனால் நாம் அப்படிக் கருத வேண்டும்.
லாங் ஃபெல்லோ
மனிதனை எது அடிமையாக்குகிறதோ அது அவன் தகுதியில் பாதியை அழித்து விடுகிறது.
- போப்
அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவது போலாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால் அது ஏதோ அலையின் ஓசை போல், அதில் பயம் தெளிந்து விடும்.
கோல்பெர்ட்
மற்றவர்களது மகிழ்ச்சியைப் பற்றி மக்கள் கற்பனையாக எண்ணிக் கொள்வதே அவர்களது அதிருப்திக்குக் காரணம்.
- தாம்சன்
முறை தவறிச் சேர்த்த செல்வம் முட்கம்பிகளுள்ள அம்பு போன்றது. அதை உடலிலிருந்து எடுக்கும் போது பயங்கரமான வேதனை ஏற்படும். அப்படி எடுக்கா விட்டாலோ அது அழிவையே ஏற்படுத்தி விடும்.
ஜெரிமி டெய்லர்
உலகத்தின் சோதனைகளுக்கு உட்படாமலும், அதனிடம் பாடம் கற்காமலும் ஒருவன் நிறைவுள்ள மனிதனாக விளங்க முடியாது.
ஷேக்ஸ்பியர்
ஓர் அபிப்பிராயம் உண்மைக்குப் பொருத்தமானதாக இல்லா விட்டாலும் அது உன்னுடையது என்பதற்காக அதைப் பிடிவாதமாக நீ பற்றிக் கொண்டிருந்தாயானால் உண்மையை விட நீயே மேலானவன் என்று கருதுவதாகும்.
- வென்னிஸ்[/b]
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-f97ISYwG3rE%2FUB4nMF7Z5iI%2FAAAAAAAABCA%2FnV9vsfTCw5Y%2Fs1600%2Fada.png&hash=2c0ba52b73ece5567ea0ce91d6f3e173acd234dc)
கவலையோ பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கிறது. நம் அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை, பாதி நம்பத் தகாதவை.
- போவீ
ஒரு சிறந்த கவிஞன் ஒரு சோலையின் மிகச் சிறந்த பயன்களை எல்லாம் அனுபவித்து விடுகிறான். ஆனால் அந்த சோலையின் சொந்தக்காரனோ பழங்கள், மட்டுமே வீட்டுக்குச் சுமந்து செல்கிறான்.
- தோரோ
உலகில் நீங்கள் பிறக்கும் போது எதையும் கொண்டு வராமல் வெறும் உடலோடு தானே பிறந்தீர்கள். அதனால் பின்னால் எது கிடைத்தாலும் அதை லாபமென்று கொல்கிற மனப்பான்மையே வேண்டும்.
- டாமிஸ்டீல்
பிடிவாதமுள்ள மனிதர்களுக்கு அவர்கள் அடையும் கஷ்ட நஷ்டங்களே ஆசிரியர்கள்.
- ஷேக்ஸ்பியர்
மனிதர்கள் நம்மை நிந்திக்கையில் நாம் நம்மையும், அவர்கள் நம்மைப் புகழும் போது நாம் அவர்களையும் சந்தேகிக்க வேண்டும்.
-கோல்டன்
அபிப்பிராய வேற்றுமைகளுக்காக நான் ஒரு மனிதனை விட்டு விலக மாட்டேன், அவனுடைய முடிவைக் கண்டு கோபமடையவும் மாட்டேன். ஏனெனில் நானே சில நாட்களுக்குப் பிறகு என் கருத்துகளுக்கு எதிராக முடிவு செய்யவும் கூடும்.
-ஸர் தாமஸ் ப்ரௌன்
அதிக வறுமைப்பட்டவரும் அதிகச் செல்வமுடையவரும் நியாயத்தைச் சொன்னால் கேட்க மாட்டார்கள்..
-ஃபீல்டிங்
தகுதியற்ற புகழ்ச்சி மறைமுகமான அவதூறாகும்.
-போப்
ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரணமான முயற்சிகளைக் கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக் கொண்டே பார்க்க வேண்டும்.
-பாஸ்கல்
தன் அறியாமையைத் தான் அறியாதிருத்தலே அறியாமையின் துயரம்.
-
ஆல்காட்
அற்ப மனிதர்களுக்கு அற்ப விஷயங்கள் பெரிதானவை.
-கோல்டுஸ்மித்
ஆடம்பரத்தின் மென்மையான மெத்தையில் தான் பெரும்பாலான சாம்ராஜ்ஜியங்கள் மாய்ந்தொழிகின்றன.
- யங்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-f97ISYwG3rE%2FUB4nMF7Z5iI%2FAAAAAAAABCA%2FnV9vsfTCw5Y%2Fs1600%2Fada.png&hash=2c0ba52b73ece5567ea0ce91d6f3e173acd234dc)
முகத்துதியாகப் பேசுவோரிடம் இருப்பதை விட காகங்களிடையே வீழ்ந்து கிடக்கலாம். அவைகள் பிணங்களை மட்டுமே கொத்தும். இவர்கள் உயிர் உள்ளவர்களையே கொத்துகிறார்கள்.
- ஆண்டிஸ்தினீஸ்
சில சமயம் இழப்பது தான் பெரிய ஆதாயமாயிருக்கும்.
-ஹெர்பர்ட்
போரிலே கூட புற ஆற்றலினும் மன ஆற்றலே மூன்று மடங்காகும்.
-நெப்போலியன்
அற்ப விஷயங்கள், சொற்ப உபசாரங்கள், ஒன்றுமில்லை என்று சொல்லத்தக்க சாதாரண விஷயங்கள் – இவற்றைக் கொண்டே உலக வாழ்வில் மக்கள் உன்னை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள்.
-செஸ்டர்ஃபீல்டு
இதயத்தின் காரணங்களைப் பகுத்தறிவு புரிந்து கொள்வதில்லை.
-பாஸிட்
இயற்கையின் விதிகள் நீதியானவை. ஆனால் பயங்கரமானவை.
- லாங்ஃபெல்லோ
இழிவான அற்ப விஷயங்களில் ஈடுபடுவது மனம் பலவீனமாக இருப்பதைக் காட்டும், மேலும் பலவீனப்படுத்தும்.
-கௌப்பர்
வாழ்க்கையில் நிகழ்ச்சிகள் எத்தகையவை என்பதை விட அவைகளை எப்படி நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே இன்பம்.
-ஹம்போல்ட்
உலகின் இயல்பு இறந்து போன திருத்தொண்டர்களைப் புகழ்தலும் உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்துவதும் தான்.
-என்.ஹேர்
உணர்ச்சி மிகுந்தவர்கள் தலைகளைக் கீழே வைத்துக் கொண்டு நிற்பவர்கள். அவர்களுக்கு எல்லாமே தலைகீழாகவே தெரியும்.
-பிளேடோ
உலகில் நமக்குள்ள ஒரே வேலி அதை நன்றாகப் புரிந்து கொள்ளல் மட்டுமே.
- லாக்
களைப்பு கல்லின் மீதும் குறட்டை விடும். அமைதி இல்லாத சோம்பலிற்குத் தலையணையும் உறுத்தும்.
- ஷேக்ஸ்பியர்
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-f97ISYwG3rE%2FUB4nMF7Z5iI%2FAAAAAAAABCA%2FnV9vsfTCw5Y%2Fs1600%2Fada.png&hash=2c0ba52b73ece5567ea0ce91d6f3e173acd234dc)
ஒருவன் தான் தவறு செய்வதை ஒப்புக் கொள்ள வெட்கப்படவே கூடாது. ஒப்புக் கொள்வதன் பொருள் என்ன? அவன் நேற்றை விட இன்று அதிக அறிவு பெற்றிருக்கிறான் என்பதே.-
போப்
நாம் வாழும் போது உலகம் முழுவதையும் வளைத்துக் கட்டிக் கொள்ள விரும்புகிறோம். ஆனால் இறந்த பிறகு தான் எவ்வளவு சிறிய இடம் நமக்குப் போதுமானது என்று தெரிகிறது.
- மாசிடோனிய மன்னர் பிலிப்
கல்விச் செருக்கு படித்த குப்பைகளை நம் தலைகளில் திணித்து
இருக்கின்ற மூளையை வெளியே தள்ளி விடுகின்றது.
- கோல்டன்
கேலியின் பெருமை கேட்பவர் செவியைப் பொறுத்தது. அது ஒரு போதும் சொல்பவர் நாவில் இல்லை.
- ஷேக்ஸ்பியர்
சணலை நெருப்பில் இருந்து ஒதுக்கி வைக்கவும். இளைஞனை சூதாட்டத்தில் இருந்து ஒதுக்கி வைக்கவும்.
- ஃபிராங்க்ளின்
ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை.
- அரிஸ்டாடில்
சம்பாஷணை உலக அறிவை விருத்தி செய்யும். ஏகாந்தம் பேரறிவின் பள்ளி.
- கிப்பன்
உரையாடலில் மௌனமாய் இருப்பதும் ஒரு கலையாகும்.
- ஜாஸ்லிட்
அறிவுடைமை வலிமையை விடப் பெரியது. இயந்திர நுணுக்கங்களை அறிந்தவன் வெறும் வலிமையைக் கண்டு சிரிக்கிறான்.
- ஜான்சன்
நல்லவர்களது துரதிர்ஷ்டம் அவர்களை வானை நோக்கி முகங்களைத் திரும்பும்படி செய்கின்றது; கெட்டவர்களது துரதிர்ஷ்டம் அவர்கள் தரையை நோக்கி தலைகளைத் தொங்கவிட்டுக் கொள்ளும்படி செய்கின்றது.
- ஸா அதி
கண்கள் ஒன்று சொல்ல நாவொன்று சொன்னால், விஷயம் அறிந்தவன் கண்கள் சொல்வதையே நம்புவான்.
- எமர்சன்
பொய்யைத் துரத்திக் கொண்டு ஓடாதே. நீ அதை விட்டு விட்டால் அது விரைவில் தானாகவே செத்து விடும்.
- இ.நாட்
வழக்கங்கள், நம்பிக்கைகள், உறுதிகளை அமைக்க வேண்டிய பருவம் இளமைப் பருவம்.
- ரஸ்கின்
கூட்டம் தன் அபிமானத்தைக் கொண்டே சிந்திக்கும். அறிவைக் கொண்டு சிந்திக்காது.
-ட்புள்யூ.ஆர்.ஆல்ஜெர்
நேர்த்தியாகச் செய்து முடிப்பதோடு உன் வேலை தீர்ந்தது. அதைப் பற்றி பேசுவதை மற்றவர்களுக்கு விட்டு விடு.
- பிதாகோரஸ்