]உன்னுடன் நான்
வாழ ஆரம்பித்தப் பின்..
எனது வலிகள் எல்லாம்..
நல் வழிகலாகி போயின..
உன் கரங்கோர்த்து
நான் நடக்கையில்..
முட்பாதைகளும்
புல்வெளியாயின...
நாள் முழுவதும்
உன்னருகேயே தான்
இருக்கிறேன்..
இருப்பினும் நேரம்
போதவில்லை..
எதையுமே
போதும் என்று
சொல்லகின்ற மனது..
உன் அரவணைப்பை மட்டும்
கேட்டுக்கொண்டே
இருக்கிறது..
தாய்க்கு மகளாக
இருந்த நான்
இன்று
தாய்மைக்கான விதை
கண்டேன் உன்னால்..
உறவாக தான் வந்தாய்..
என்னுள் உயிராகி
நிற்கிறாய்..
மறந்தும் கூட
மறக்க மாட்டேன்
உயிரே..
உன்னிடம் நான் கொண்ட
பந்தத்தை..!
THANA NALLA ERUKU UN KAVITHAI KANNU PADA POTHUDA