நீர்க்கடுப்பை துரத்தியடிக்கும் நன்னாரி பால் ! நாட்டு வைத்தியம் !
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F_MkIkG0WZkmA%2FTTH-XqfbrzI%2FAAAAAAAAAMc%2F5lQgCczZxlY%2Fs1600%2F1.jpg&hash=a9eccb9d095fc48715a8c5faff52a280c1da792a)
கோடைக்காலம் தொடங்கிட்டு. இப்பல்லாம் முன்ன மாதிரி இல்ல. மழை பெஞ்சா விடாம பெய்யும்... வெயில் அடிச்சாலும் வெளுத்து வாங்கும். எல்லாம் காலத்தோட கோலம். ஆனாலும் இந்தப் பருவத்துல வர்ற நோய்கள்ல இருந்து நம்மளை காப்பாத்திக்கிறதுக்கு இந்தப் பாட்டி சொல்ற வைத்தியங்களை செய்யுங்க. சூடு பிடிக்கிறது, கட்டி வர்றதுனு சின்னப்புள்ளைங்கள பாடாப்படுத்திரும். கவனமா இருக்கணும்...
சின்னக் குழந்தைங்களுக்கு சிலநேரம் சிறுநீர் போகாம கட்டிக்கிடும். இதனால வயிற்று வலி வந்து துடிக்கும். இதைத் தாயால உடனே கண்டுபிடிச்சுட முடியும். இந்த மாதிரி நேரத்துல... முருங்கைக்கீரை, வெள்ளரி விதை இது ரெண்டையும் சேர்த்து அரைச்சி வயித்துமேல கனமா பூசிட்டு வந்தா... நீர்க்கட்டு உடைஞ்சு, சிறுநீர் தானா போகும். குழந்தை தன்னை மறந்து சொகமா தூங்கும்.
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் அளவு எடுத்து மையா அரைச்சு, 200 மில்லி பால்ல கலந்து சாப்பிட்டு வந்தா... மூலச்சூடு, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் எல்லாமே இருந்த இடம் தெரியாம ஓடிப்போகும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தா... நரைச்ச முடிகூட கருகருனு மாறிடும்.
சூடு அதிகமாச்சுனா... கண்ணெல்லாம் எரியும். இன்னும் சிலருக்கு கண்ணுல இருந்து தண்ணியா கொட்டும். இது எல்லாருக்கும் வரக் கூடியதுதான். இப்படிப்பட்ட நேரத் துல கொஞ்சம் சீரகம், கொஞ்சம் மிளகு சேர்த்துப் பொடியாக்கணும். இதை தேங்காய் எண்ணெய்... இல்லைனா நல்லெண்ணெயில போட்டுக் காய்ச்சி, தலைக்கு தேய்ச்சுக் குளிச்சா... சூடு பஞ்சா பறந்துரும்.
கண்கட்டி வந்தா... கறிவேப்பிலையை சாறு எடுத்து, அதோட வெள்ளைச் சங்கை உரசி பூசிட்டு வந்தா... கட்டி உடைஞ்சுடும். தொடர்ந்து பூசிட்டு வந்தா... புண் ஆறிப்போயிரும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F_MkIkG0WZkmA%2FTTH-X0ylkEI%2FAAAAAAAAAMk%2FpOlSrYp4Gik%2Fs1600%2F2.jpg&hash=4ff290c278acb9d78c285677e204cc450069c4e5)(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F_MkIkG0WZkmA%2FTTH-onwh_HI%2FAAAAAAAAAMs%2F6Pht52j_p1w%2Fs1600%2F3.jpg&hash=c1815ae8d7794c7570880a9adeb7393165b486ab)
வாய்ப்புண், வயிற்றுப்புண் வந்தா... மணத்தக்காளி பழத்தை பச்சையாவோ, வற்றலாவோ சாப்பிட்டு வந்தா வாய்ப்புண், வயித்துப்புண் எல்லாம் சரியாயிரும். கீரையை தேங்காய்ப்பால் சேர்த்து வதக்கி சாப்பிடலாம்.
செங்கீரைத்தண்டை அடிக்கடி சமைச்சு சாப்பிட்டா... உடல் சூடு, நீர்க்கடுப்பு, மூலச்சூடு எல்லாம் சரியாகும்.