தொடை பகுதியில் உள்ள சதைகளை குறைக்க....(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-6xEQK-e71GM%2FTwFkSzt83ZI%2FAAAAAAAAGz0%2F0f1dfj90oq8%2Fs1600%2Fpowerdiet_exercises.png&hash=7613bfc2d2b2210edee425acc808a48ecc6771cc)
ஸ்லிம்மான தொடையாக மாற எந்த பெண்ணுக்கு தான் ஆசையில்லை .இதோ அதற்கு 8 எளிய உடற்பயிற்சிகள்
1.சேரில் உட்காந்துக்கொண்டு கால்களை மடக்கி தூங்கி இறக்கவும். இதனை போல் இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி 20 முறை செய்யவும்
2.சேரில் உட்காந்து கால்களை நேராக தூக்கி இறக்கவும்.
3.சுவற்றில் ஒரு கை வைத்துக் கொண்டு காலை முன்னால் நீட்டி உடைப்பது போல் 30 முறை மெதுவாக செய்யவும்.
4.கீழே படுத்துக்கொண்டு தலைக்கு பின்னால் கைகளை வைத்துக்கொண்டு கால்களை மேலே தூக்கி இறக்கவும்.
5.சைடாக படுத்துக்கொண்டு கால்களை 20 முறை தூக்கி இறக்கவும்
6.இப்ப நேராக நிற்கவும் உங்கள் இரண்டு கால்களையும் விரித்துக் கொள்ளவும் கைகளை தலைக்கு மேல் தூக்கி கை தட்டவும். 30 முறை இப்படி செய்யவும்
7.கால்களை இடுப்பு வரை தூக்கி ட்ன்ஸ் ஆடவும்.
8. அதிகமாக மாடி படிகளில் ஏறி இறங்கவும்.
இதனை சரியான முறையில் தொடர்ந்து செய்தால் தொடை ஸ்லிமாகி அழகு பெரும்