FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: suthar on August 15, 2012, 11:01:48 PM

Title: சுதந்திரத்தை மீட்டெடுபோம்.....!!
Post by: suthar on August 15, 2012, 11:01:48 PM
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைத்துவிடவில்லை....!
சுதந்திரம் ஒன்றும் சும்மா கிடைத்துவிடவில்லை.......!
சுதந்திரம் கிடைத்தது மந்திரத்தாலும் அல்ல
தந்திரத்தாலும்  அல்ல..............?

ஒற்றுமையாய் ஒட்டி உறவாடிய அரசுகளுக்கிடையே
வேற்றுமையை வளர்த்து அந்த
ஒற்றுமையின்மையை பயன்படுத்தி
ஆடை,  ஆபரணங்களை வணிகம் செய்தவன்
ஆட்சி கட்டிலில் ஏறினான்.

அந்நிய நாட்டை சேர்ந்தவன்
மண்ணின் மைந்தர்களை
கொத்தடிமையாக்கி
கொடுங்கோல் ஆட்சி செய்தான் ....!

அடிமை தளையை அகற்ற
அந்நியனை எதிர்த்து
விடுதலை உணர்வை முதன்முதலில்
விதைத்தவன் மாவீரன் பூலித்தேவன்,

வெள்ளையனின் வரிவிதிப்பை எற்றுகொள்ளாத
பாளையகாரர்களான கட்டபொம்மனும், மருதுசகோதரரும்
தன உயிரை துச்சமாக எண்ணி
தூக்கு மேடையையும் துணிவாக ஏற்றுகொண்டனர்

சுதந்திரம் எனது பிறப்புரிமை என்றவர் திலகர்
சுதந்திரத்திற்காக சூல்கொண்டு
கிளர்ச்சி செய்தவர் சுபாஷ்
கிளர்ச்சிக்கு வித்திட்டவர் பகத்சிங்,

சுதந்திர காற்றை சுவாசிக்க
சுதேசி கப்பலை செலுத்தியவர் வ. வூ. சி,
சுதந்திரம், சுதந்திரம் என்றே உயிவிட்டவர்
சுப்ரமணிய சிவா....,

உள்ளத்தில் சுதந்திர உணர்வை பாடலின் மூலம்
ஊட்டியவர் மகாக்கவி பாரதி,
உயிர் பிரிந்தாலும் பாரதக்கொடியை
உயிராய் மதித்து காத்தவர் திருப்பூர் குமரன்,

தீவிரமாய் போராடிய தீரன் சின்னமலை ,
வீரன் திப்புசுல்தான் போன்ற
வீரர்களுக்கு  நிகராக களத்தில் இறங்கிய
வீரமங்கை வேலுநாட்சியார்,
வீராங்கனை ஜான்சிராணி,
வீரதீரமிக்க கேப்டன் லட்சுமி என.....

விடுதலை வேட்கைகாக வெகுண்டெழுந்த
வீறுகொண்ட நெஞ்சங்களின்
வீரமுழக்கத்தாலும், தியாகத்தினாலும் கிடைத்த
வெற்றிதான் சுதந்திரம்.......!

அந்நியனை விரட்ட சுபாஷ், பகத் போன்றோர்
வந்தேமாதரம் என்பதை தாரக மந்திரமாக கொண்டு
உயிர் கொடுத்து, உதிரம் சிந்தி, பெற்ற
உயர்சுதந்திரத்தை உயிராய் மதிப்போம்.....!

சூழ்ச்சியால்  நாட்டை கைபற்றியவனை
வீழ்ச்சியடைய செய்து
பெற்ற சுதந்திரத்தை
பேணி பாதுகாப்போம்.......!!

வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரத்தை
வேடமணிந்து தலைவர்களாய் உலவும்
கொள்ளையனிடம் சிக்கி தவிக்கும்
சுதந்திர நாட்டை மீட்டெடுபோம்.....!!