FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on August 15, 2012, 08:41:22 PM
-
உன் புருவத்தில் துடிக்கும் ,
இதயத்தில் இறுக்கி பிடிக்கும் ,
வறண்டு போன உதடுகள் கேட்கும் ,
உன் முகங்கள் ஏங்கும் ,
நீ தேடும் தெருக்கள் நெருங்கும் ,
நீ கேட்ட ஓசைகள் வருடும் ,
நடந்த பாதைகள் சறுக்கும் ,
நாணி குறுகி மனம் போகும் ,
தோழமை உன்னை பகைக்கும் ,
ஏழ்மை ஒருநாள் உன்னை வதைக்கும் ,
எல்லாம் ஒருநாள் விலகி போகும் ,
அன்று என் அருமை உனக்கு புரியும்!!!
நான் காத்திருப்பேன் ...
உனக்காக அல்ல
உனது வாழ்க்கையை
நான் இல்லாமல் வாழ்வதை காண ...
தெருவினில் நீ வரும்போது
தெருக்கோடி எண்ணிச் சிரிக்கும்
நீ மட்டும் அழுவாய் மனதில்
என்னை விட்டு போனதிற்கு
உந்தன் அம்மாவின் கொழுப்பிற்கு
உன்னை வளர்த்த அப்பாவின் பணத்திற்கு
என்னை வைத்து விளையாடி விட்டாய்..
முற்றிலும் என்னை ஏமாட்டி விட்டாய் ..
நானும் நொடிந்து போனேன்
நாளும் மடிந்து போனேன்
உன் ஆசை வார்த்தைக்கு
நான் பலியாகி போய் விட்டதால் ...
பணம் அற்ற என்னை
பாசத்தில் அழைத்து உன்னோடு
பங்கு கொண்ட காலம் மட்டும்
என்னோடு நிற்க்குது ..உன்னோடு வரத்துடிக்குது.....
நீ கொண்ட காதல் அல்ல ,
நான் உன் மீது கொண்ட காதல்
நீ இருக்கும் வரையிலும்
என் இதயத்தில் இருக்கமாய் பதிந்திருக்கும்,
நீ எனக்கு கொடுத்த நினைவுகள் என் மனதில்
பனிக்கட்டியாய் உறைந்திருக்கும் :'( :'( :'( :'(
-
நீ கொண்ட காதல் அல்ல ,
நான் உன் மீது கொண்ட காதல்
நீ இருக்கும் வரையிலும்
என் இதயத்தில் இருக்கமாய் பதிந்திருக்கும்,
நீ எனக்கு கொடுத்த நினைவுகள் என் மனதில்
பனிக்கட்டியாய் உறைந்திருக்கும்
arumai varikal ovonrum ;)