FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on August 08, 2011, 09:15:38 PM

Title: சீக்கிரம் வந்துவிடு....
Post by: ஸ்ருதி on August 08, 2011, 09:15:38 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg98.imageshack.us%2Fimg98%2F9028%2F524a472bdb69ccf449c2d26.gif&hash=43bd0af2831da9ca2a9c429fb8981d5bb68debb2)

ஒவ்வொரு நாளும்
உன்னை நினைத்தே
என் நிமிடங்கள்
கரைகிறது.....

உன்னோடு பேச எண்ணி
ஓயாமல் உன் எண்களை
அழுத்தி கைபேசியில்
அச்சுக்கள் அழிந்தே விட்டன....
அழிந்து போனது அச்சுக்கள்
மட்டுமே...
என் மனதில் அழியாமல்
உன்னை சுமந்தே
தனிமையாய் செல்கிறது
என் நாட்கள்....

நொடிகள் நிமிடங்களாகி
நிமிடங்கள்
பல மணிகளை
கடந்து நாட்கள் ஓடி
வருடம் கூடி
இன்னும் குறையவில்லை
என் காதல்....

என் இதயத்துடிப்பின்
ஓசையில்
உன் பெயர் ஒலிக்கும்....
ஒவ்வொரு துடிப்பிலும்
உன் பெயரை முத்தமிட்டே
என் இதயம் உயிர் பெறும்

உன்னை மட்டுமே நேசித்து
உனக்காக வாழும்
சுகம் போதும்....
உன்னை எதிர் பார்த்தே
வாழ்ந்திருப்பேன்
என் வாழ்வின் இறுதி வரையிலும்....

என் உயிரே!!!
சீக்கிரம் வந்துவிடு....
உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம் மறக்கவேண்டும்
ஆதரவாய் நீ தலை கோதும்போது
என் ஆயுள் போகவேண்டும்...
உன் மடியினிலே
என் ஆயுள் போகவேண்டும்...

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg3.imageshack.us%2Fimg3%2F8810%2F2604faffe79b1aee68baa6dtf3.gif&hash=4301d8f8a6e4c857b764fb836f846913d9f6e2a8)
Title: Re: சீக்கிரம் வந்துவிடு....
Post by: Swetha on August 08, 2011, 09:50:15 PM
Nice one  :) Lines elam touchinga irku
Title: Re: சீக்கிரம் வந்துவிடு....
Post by: Global Angel on August 08, 2011, 11:19:16 PM
என் உயிரே!!!
சீக்கிரம் வந்துவிடு....
உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம் மறக்கவேண்டும்
ஆதரவாய் நீ தலை கோதும்போது
என் ஆயுள் போகவேண்டும்...
உன் மடியினிலே
என் ஆயுள் போகவேண்டும்... :'(


காதல் என்றாலே வலிகளை சுமகின்றவை போலும்... நல்ல கவிதை .. ;)
Title: Re: சீக்கிரம் வந்துவிடு....
Post by: ஸ்ருதி on August 08, 2011, 11:23:30 PM
Nice one  :) Lines elam touchinga irku


 ;)  ;)  ;)  ;)
ரசிச்சு ரசிச்சு எழுதின கவிதை, அப்படியே நம்ம ஆசையையும் சொல்லிக்கொள்ள ஒரு வாய்ப்பு

Title: Re: சீக்கிரம் வந்துவிடு....
Post by: ஸ்ருதி on August 08, 2011, 11:25:05 PM
என் உயிரே!!!
சீக்கிரம் வந்துவிடு....
உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம் மறக்கவேண்டும்
ஆதரவாய் நீ தலை கோதும்போது
என் ஆயுள் போகவேண்டும்...
உன் மடியினிலே
என் ஆயுள் போகவேண்டும்... :'(


காதல் என்றாலே வலிகளை சுமகின்றவை போலும்... நல்ல கவிதை .. ;)


எனக்கு மிகவும் பிடித்த வரிகள்


உன் மார்பில் முகம்
புதைத்து அழுது
என் துன்பம் மறக்கவேண்டும்
;) ;)
Title: Re: சீக்கிரம் வந்துவிடு....
Post by: pEpSi on August 09, 2011, 07:14:16 AM
nice lines shuruthi... nalla think panni ruknga...
Title: Re: சீக்கிரம் வந்துவிடு....
Post by: ஸ்ருதி on August 10, 2011, 09:37:03 AM
நன்றிகள்  மன்மதன்