FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 14, 2012, 02:41:31 PM

Title: முத்தமழை அதற்காக .....
Post by: aasaiajiith on August 14, 2012, 02:41:31 PM
மழையின் அழகினில் உருகியே மருகிய
மிகப்பெரும் ரசிகன் நான் முன்பு

இன்றோ மூன்றாண்டு காலமாய் மழையினை
மட்டுமின்றி, மழையின் துளியினையும்

தீவிரமாய் தவிர்த்து வருகின்றேன் தீர்க்கமாய்
மணக்கும் உன் அறிமுகத்திற்கு பிறகு

தப்பித்தவறி தீண்டிடும் தீந்துளிகள் கூட
தேகம் தகிக்கும் தீத்துளியாய்

அதனால்தானோ,? சிலக்காலமாய் சரிவர
மழையும் இறங்குதில்லை மண்ணில் ??

சோக மழைக்காக வக்காலத்து வாங்கிட
வானவில் வந்திருந்தது விண்ணில்

முன்னால் மழை பிரியரே , ஒரு வினாவுக்கு விளக்கம் தெரிவிப்பீரா ??
இத்திடீர் தீண்டாமை தீர்மானம் வான்மழைக்கு எதற்க்காக ??

மழையினும் குளிரான மலர்மகள்,அவளின்,முதல்சந்திப்பின்பொழுது
மொத்தமாய் பொழியவிருக்கும் முத்தமழை அதற்காக .....