FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 12, 2012, 11:50:33 PM

Title: ~ தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் !!! ( மறு பதிவு ) ~
Post by: MysteRy on August 12, 2012, 11:50:33 PM
தக்காளிப் பழத்தின் மருத்துவ பயன்கள் !!! ( மறு பதிவு )

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fa3.sphotos.ak.fbcdn.net%2Fhphotos-ak-ash4%2F431133_275590745879766_724730941_n.jpg&hash=1490518a3c8dfe580fbdf797a468f3bc3b076955) (http://www.friendstamilchat.com)


தக்காளி என்பதும் ஏதோ குழம்பு வைப்பதற்குத் தேவையான ஒன்று என்றே அனைவரும் கருதுகின்றனர். தக்காளியும் பழ வகைகளில் ஒன்றுதான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

பழங்களைச் சாப்பிடுவதைப் போலவே தக்காளிப் பழத்தையும் அப்படியே சாப்பிட்டால் உடலிற்கு வளத்தையும் நல்ல பலத்தையும் கொடுக்கும்.

தக்காளிப் பழத்தை அப்படியே சாப்பிடுவது என்பது கிட்டத்தட்ட டானிக் குடிப்பதற்கு ஒப்பானது. அதுமட்டுமல்லாமல், தக்காளிப் பழத்தை எந்த வகையில் பக்குவப்படுத்திச் சாப்பிட்டாலும், அதன் சக்தி அப்படியே நமக்குக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் ஏ சத்து 91 மில்லி கிராம் உள்ளது. வைட்டமின் பி1 சத்து 34 மில்லி கிராம், பி2 வைட்டமின் 17 மில்லி கிராமும், சி வைட்டமின் 9 மில்லி கிராமும் உள்ளது. மிகக் குறைவாக சுண்ணாம்புச் சத்து 3 மில்லி கிராமே உள்ளது.

தக்காளிக்கு இரத்தத்தை சுத்திகரிக்கும் ஆற்றல் உண்டு. இரத்தத்தையும் இது உற்பத்திச் செய்யக் கூடியது. நல்ல இரத்தத்திற்கு வழி செய்வதால் இரத்த ஓட்டமும் சீராக இருக்க உதவுகிறது.

பொதுவாக இரத்த ஓட்டம் சீராகவும், சுத்தமாகவும் இருந்தாலே உடலில் நோய்த் தொற்று ஏற்படுவது எளிதான காரியமல்ல.

தக்காளிப் பழத்தை எந்தவிதத்திலாவது தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

தக்காளிப் பழத்தை சூப்பாக வைத்து காலை, மாலையில் சாப்பிட்டு வந்தால் உடல் சருமம் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுவது மட்டுமல்லாமல் சருமம் மென்மையாகவும், ஒருவித பொலிவுடன் திகழும்.

இதுமட்டுமல்லாமல், சரும நோய்கள் வராமலும் பார்த்துக் கொள்ளும்.

தக்காளிப் பழத்தைக் கொண்டு ஜாம் செய்து வைத்துக் கொண்டால், அதனை இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என காலை உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளும் விரும்பி உண்பார்கள். அவர்களுக்குத் தேவையான சத்தும் எளிதில் கிடைத்துவிடும்.

விலை உயர்ந்த பழங்களை உட்கொள்ள முடியாத ஏழை, எளிய மக்கள் தக்காளிப் பழத்தை சாப்பிடலாம் என்று சொல்லலாம். ஆனால், தற்போதைய விலைவாசியில் தக்காளிப்பழமும் ஒரு விலை உயர்ந்த பழமாக மாறிவிட்டுள்ளது என்பதே உண்மையாக இருக்கிறது.