FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 11, 2012, 01:46:35 AM

Title: 7ல் சனி இருந்தால் மண வாழ்க்கை சிறப்பாக இருக்காது என்று கூறப்படுகிறதே?
Post by: Global Angel on August 11, 2012, 01:46:35 AM

பொதுவாகவே ஏழாவது வீட்டில் சனி, ராகு, கேது, செவ்வாய் ஆகியவை இல்லாமல் இருப்பது நல்லது. அதே நேரத்தில் எந்த லக்னத்திற்கு 7ல் சனி இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும்.

உதாரணமாக ரிஷப லக்னத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 7வது வீடு விருச்சிகமாகும். ரிஷபத்தில் விசாகம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் வருகின்றன. அதில் அனுஷம் நட்சத்திரத்திற்கு சனி 7ல் இருப்பது நல்ல பலன்களைத் தரும்.

ஏனென்றால் அனுஷம் சனியின் நட்சத்திரமாகும். ரிஷப லகனத்திற்கு யோகாதிபதியும் சனி ஆவார். இதன் காரணமாக அனுஷ ராசி, ரிஷப லக்னத்தைக் கொண்ட ஜாதகருக்கு சனி 7இல் இருந்தால் அதிகம் படித்த, தன்னை விட அழகான, அதிகம் சம்பாதிக்கும், பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த வாழ்க்கைத் துணை அமையும்.

இதேபோல் மிதுனம், கன்னி ஆகிய லக்னத்திற்கும் 7இல் சனி இருந்தால் சிறப்பான பலன்களே கிடைக்கும். கடகம், சிம்ம லக்னத்திற்கு 7இல் சனி இருப்பது (சொந்த வீட்டில் உள்ளதால்) நல்ல பலன்களை கொடுக்கும்.

ஆனால் மேஷ லக்னத்திற்கு 7இல் சனி இருந்தால் வாழ்க்கைத் துணை வழியில் கெடு பலன்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணையால் அவமானங்கள், சிறைத் தண்டனை, அவமதிப்புகள், நீதிமன்ற வழக்குகளை சந்திப்பது போன்றவை ஏற்படும்.

பொதுவாக 7இல் சனி இருப்பவர்களுக்கு சனி தசை வந்தால் சில பாதிப்புகள் ஏற்படும். அந்த நேரத்தில் வாழ்க்கைத் துணைக்கு நல்ல தசை நடந்தால் சிக்கல் குறையும்.

எந்த லக்னமாக இருந்தாலும் 7இல் சனி இருந்து சனி தசை நடக்கும் போது பாதிப்புகள் ஏற்படுவது இயல்பானது. குறிப்பாக மேஷத்திற்கு அதிக பாதிப்புகள் ஏற்படும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

ஒருவருக்கு 7இல் சனியுடன், குரு, புதன் போன்ற சில சுப கிரகங்கள் சேர்க்கை பெற்றிருந்தால் பலன்கள் வேறுபடுமா?

7ல் சனி இருந்து அதனுடன் குரு சேர்க்கை பெற்றிருந்தாலோ, பார்த்தாலோ, சனியால் ஏற்படும் கெடு பலன்கள் குறையும். இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது. தம்பதிகளுக்கும் குறுகிய கால பிரிவுகள் ஏற்பட்டாலும் இறுதியில் இணைந்து விடுவர்.