FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 11, 2012, 01:45:47 AM

Title: ஒருவருக்கு எந்த தசா புக்தி நடக்கிறது என்பதை எப்படிக் கணிப்பீர்கள்?
Post by: Global Angel on August 11, 2012, 01:45:47 AM

பதில்: நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்தே இன்று தசா புக்தி கணக்கிடப்படுகிறது. உதாரணமாக பரணி நடத்திரம் என்றால் பிறக்கும் போதே சுக்கிர தசை இவ்வளவு ஆண்டுகள் மீதமுள்ளது. அதற்கடுத்து சூரிய தசை, சந்திர தசை, செவ்வாய் தசை எவ்வளவு காலம் உள்ளது என்று கணிப்பார்கள்.

லக்னம் எந்த நட்சத்திரத்தில் உட்கார்ந்திருக்கிறது, என்ன அமைப்பில் இருக்கிறது என்பதையும் பார்ப்பது நல்லது. உதாரணமாக ஒருவர் கடக லக்னத்தில் பிறந்திருப்பார். அவருடைய லக்னம் பூசம் நட்சத்திரத்தின் 2ஆம் பாதத்தில் அமர்ந்துள்ளது என்றால் அதற்கு என்ன தசை நடக்கிறது என்பதையும் கணித்தால் சிறப்பாக இருக்கும்.

இதுமட்டுமின்றி கால சக்கர தசை என்றும் உள்ளது. இதனை வைத்து சிலவற்றை கணிக்க முடியும்.

ஆனால் இன்றைய நடைமுறையில் உள்ள வழக்கம் என்னவென்றால், ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்திருக்கிறாரோ அதனை வைத்துதான் தசா புக்தி கணக்கிடப்படுகிறது. இதைத்தான் தற்போதுள்ள 90% ஜோதிடர்கள் பின்பற்றுகின்றனர். மீதமுள்ள 10% ஜோதிடர்களே அனைத்து தரப்பையும் ஆராய்ந்து கணிக்கின்றனர்.