FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 11, 2012, 01:43:27 AM
-
பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகங்கள் இல்லாமல் இருப்பது நல்லது. அப்படி நீச்சம் பெற்றிருந்தால் அந்த ஜாதகருக்கு எதிலுமே மனத்திருப்தி இல்லாத நிலை காணப்படும்.
ஒருவர் எந்த லக்னமாக இருந்தாலும் ஏழாம் இடத்தில் குரு அல்லது எந்த கிரகம் நீச்சமடைந்தாலும், ஏதாவது ஒரு வகையில் வாழ்க்கைத் துணை மனதிற்கு பிடிக்காமல் போகும். ஆனால் உண்மையிலேயே அந்த பெண்/ஆண் சிறப்பான குணநலன்களையும், அழகையும் பெற்றிருப்பர். இவரது மனதிற்கு அப்படித் தோன்றும் நிலை காணப்படும்.
தனக்குப் பார்த்த பெண் சிறப்பாக படித்திருந்தாலும், குறிப்பிட்ட கல்லூரியில் படித்திருந்தால் சிறப்பாக இருக்குமே என்று அந்த ஜாதகர் கருதுவார். இதன் காரணமாகவும் திருமணம் தள்ளிப்போகும் நிலை ஏற்படும். 7இல் நீச்ச கிரகம் இருப்பதும் இதனை உணர்த்துவதற்காகவே.
எனவே, 7இல் நீச்ச கிரகம் உள்ளவர்கள் தங்கள் தகுதிக்கு (படிப்பு/பொருளாதாரம்) குறைந்த இடத்தில் குணத்தில் உயர்ந்த வாழ்க்கைத் துணையை தேர்வு செய்து சிறப்பான மணவாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாம்.
பொதுவாகவே 7ஆம் இடத்தில் நீச்ச கிரகம் இருப்பவர்கள் மனதளவில் திருப்தியடைய முயல வேண்டும். வாழ்க்கைத் துணை வசதி குறைவாக இருந்தாலும் நல்ல ஒழுக்கமான, படித்த ஆண்/பெண் ஆக இருந்தால் உடனே திருமணத்தை முடித்துவிட வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.