FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 11, 2012, 01:22:55 AM
-
மீன லக்னத்திற்கு 8வது இடமாக துலாம் வருகிறது. துலாத்தில் சுக்கிரன், ராகு, சூரியன், புதன் அமர்ந்திருப்பதால் (4 கிரகங்கள்) களத்திர தோஷம் உண்டாகிறது. எனவே, பொருத்தம் பார்க்கும் போது இவருக்கு தகுந்த ஜோதிட அமைப்பு உள்ள பெண்ணைப் பார்த்து திருமணம் செய்தால் மட்டுமே மணவாழ்க்கை சுமுகமாக இருக்கும்.
துலாத்தில் உள்ள சுக்கிரன் சொந்த வீட்டில் இருந்தாலும் ராகுவின் சேர்க்கையால் கெட்டுப் போய் உள்ளது. சூரியனின் ஆக்ரஷ்ன சக்தியும் சுக்கிரனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் அவை எந்தப் பாகையில், நட்சத்திரத்தில் உள்ளது என்பதை முதலில் பார்க்க வேண்டும். இதில், ஒன்றுக்கு ஒன்று கிரக யுத்தம் இல்லாமல் இருப்பது நல்லது.
சுக்கிரன், ராகு, சூரியன், புதன் ஆகிய 4 கிரகங்களும் மூன்று முதல் ஐந்த பாகை தூரம் விலகி நன்றாக அமைந்து இருந்தால் அதனால் எந்தவிதக் கெடுபலனும் ஏற்படாது. மாறாக, நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பண்புள்ள மனைவி அந்த ஜாதகருக்கு அமையும்.
சுக்கிரன், புதன் சேர்க்கை ‘வீணா யோகத்தை’ ஏற்படுத்தும். எனவே கலைமகள் போன்ற மனைவி அந்த ஜாதகருக்கு அமைவாள் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.
ஆனால் சுக்கிரன், புதனுடன் ராகு உள்ளதால் மனைவி வழியில் ஏதாவது குறை இருக்கும். உதாரணமாக மாமனார் இருந்தால், மாமியார் இருக்க மாட்டார் அல்லது மனைவிக்கு உடல்நலக் குறைபாடு இருக்கும்.
இந்த ஜாதகர் எந்த ராசி என்பதைக் குறிப்பிடவில்லை. அதனால் ராசிக்கு எத்தனையாவது வீட்டில் இந்த 4 கிரகங்களும் அமர்ந்துள்ளன என்பதைப் பார்க்க வேண்டும்.
நான்கு கிரகங்களும் ஒன்றாக இருந்து ராகு தசை நடந்து கொண்டிருந்தால் அப்போது பாதிப்பு ஏற்படும். கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல், மனைவிக்கு அறுவை சிகிச்சை, விபத்து ஆகியவற்றை கொடுக்கும். இதற்காக பொருத்தம் பார்க்கும் போதே தம்பதிகளுக்கு ஒரே காலத்தில் மோசமான தசை நடைபெறாமல் இருக்கும் வகையிலான ஜாதகமாக சேர்க்க வேண்டும்.
இவருக்கு 8ஆம் இடத்தில் உள்ள 4 கிரகங்களின் சேர்க்கை கடுமையான தோஷத்தை உருவாக்காது. ஆனால் அதே நேரத்தில் இந்த ஜாதகருக்கு பெண் பார்க்கும் போது சுக்கிரன் பலமாக உள்ள ஜாதகமாக சேர்த்தால் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும்.
பரிகாரம்: ஸ்ரீரங்கநாதரை வணங்குவதே இதற்கு சரியான பரிகாரம். “கிரகங்களில் சுக்கிரனும் நானே” என பகவத் கீதையில் கிருஷ்ணர் கூறியுள்ளார். சுக்கிரனின் வீடு. அசுரர்களின் தலைவனாக சுக்கிரன் விளங்குகிறார். துலாத்தில் ராகு (சர்ப்பம்) உள்ளதால் காவேரியில் குளித்து விட்டு துலாம் ரங்கநாதரை வணங்க வேண்டும்.