FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 08, 2011, 03:35:17 PM

Title: கனவுகள் வேறு திசை.......!
Post by: Yousuf on August 08, 2011, 03:35:17 PM
அம்மாவின் மருத்துவச் செலவு
அப்பாவின் கடன்
தங்கைகளின் திருமணம்
தம்பியரின் படிப்பு
பக்கத்தில் எழும்பியிருக்கும்
புதிய வீடு
இதயம் கவர்ந்தவளுடன்
இணைந்து நடக்க
போடப்படவேண்டிய
பொருளாதாரப்பாலம்.....

புலம் பெயர்வின் காரணங்கள்
பொதுவென்றே நினைத்திருந்தேன்
எனக்கும் அவளுக்கும்.

நட்சத்திர உணவகங்களும்
நல்கிட இயலாத
அம்மாவின் கைப்பக்குவம்

தந்தை முகம் பாராது வளரும்
தலைமுறை அவலத்தை
துடைக்க நினைக்கும் துடிப்பு....

எப்போதும் புதிதாக
இளம் மனைவி......

மாலை நேரக் கடற்கரை
மழலையர் பேசும் யாழிசை.....

புரிந்துணர்வுத் தோழமை
புத்தகச் சந்தை....

இப்படியாக நீளும்
ஏக்கங்களும் பொதுவோ?

எனினும்......

பேரினவாதத்தின் அரக்கப்பசிக்கு
பறி கொடுப்பதற்கு
இனியேதுமில்லாது.......

கனவுகளைத் திரையிட
கண்களில் மட்டுமே உயிர் வளர்க்கும்
என் சக அறைத்தோழனுக்கு
எப்படித் தருவேன் ஆறுதலை?!
Title: Re: கனவுகள் வேறு திசை.......!
Post by: Global Angel on August 08, 2011, 05:13:56 PM
கவிதை நன்றாகவே இருக்கிறது  ;)

எப்போதும் புதிதாக
இளம் மனைவி......
                                   ::) ::) ::) ::)
Title: Re: கனவுகள் வேறு திசை.......!
Post by: Yousuf on August 08, 2011, 10:25:31 PM
Yenna ilippu :P :P :P
Title: Re: கனவுகள் வேறு திசை.......!
Post by: ஸ்ருதி on August 08, 2011, 10:30:06 PM
நன்றாக இருக்கிறது