FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on August 09, 2012, 08:38:47 PM
-
கடந்த 1958இல் பிறந்த ஒருவர் சமீபத்தில் என்னிடம் ஜாதகம் பார்க்க வந்திருந்தார். அவரது ஜாதகத்தில் எந்தவித சிறப்புகளும் இல்லை. அவருக்கு லக்னாதிபதி வக்ரம் அடைந்திருந்தார். பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி ஆகியோர் மறைந்திருந்தனர். பாதகாதிபதி வலுவடைந்திருந்தார்.
அவரது ஜாதகத்தை கணித்ததன் மூலம் அவருக்கு எந்த யோகமும் வாழ்வில் கிடைத்திருக்காது என்பது தெளிவாகத் தெரிந்தது. மேலும், அரசு தண்டனை போன்ற அமைப்புகளும் அவரது ஜாதகத்தில் இருந்தது. எனினும், அவரது மனைவியின் ஜாதகத்தால் அவருக்கு சில வசதி, வாய்ப்புகள் கிடைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த அவர், “நீங்கள் கூறியது போல் நான் சிறைத் தண்டனை பெற்றது உண்மைதான். திருமணத்திற்கு முன்பாக சிறைவாசம் அனுபவித்தேன். பெற்றோரின் நிர்ப்பந்தம் காரணமாக திருமணம் நடைபெற்றது. அதன் பின்னர்தான் மூன்று வேளை திருப்தியாக சாப்பிட முடிந்தது. அதற்கு முன் பல நாட்கள் பட்டினியால் அவதிப்பட்டுள்ளேன். மனைவி கொண்டு வந்த பணத்தில்தான் ஒரு வீடு வாங்கினேன்.
வீட்டை உங்கள் பெயரில் வாங்கியிருந்தால், உடனடியாக அதனை மனைவி பெயருக்கு மாற்றுக் கொடுக்கும்படி வலியுறுத்தினேன். ஏனென்றால் அவரது ஜாதகப்படி அவருக்கு எந்த சொத்தும் நிரந்தரமாக இருக்காது என்று கூறினேன்.
அதுவும் உண்மைதான் என்று அவரே என்னிடம் கூறினார். திருமணத்திற்கு முன்பாக தனது குடும்பத்தின் வருவாய் மூலம் 3 வீடுகள் வாங்கியதாகவும், தற்போது அவை அனைத்தையும் விற்று விட்டதாகவும் தெரிவித்தார்.
ஒருவர் நன்றாக இருக்க வேண்டுமென்றால் அவரது ஜாதகத்தில் லக்னாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி ஆகிய மூவரும் சிறப்பாக இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு இந்த மூவரும் பாதிக்கப்பட்டிருந்தால் அந்த ஜாதகம் எதற்குமே லாயக்கில்லாத ஜாதகம் போல் இருக்கும்.