FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on August 08, 2012, 12:14:38 PM

Title: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 08, 2012, 12:14:38 PM




"எத்தனைக்கோடி இன்பம்வைத்தாய் இறைவா "
இறைநம்பிக்கை இல்லாதவரும் இசைந்து போகும்
இனிய தத்துவம் இது , காதலினால் .
ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: ஸ்ருதி on August 09, 2012, 11:28:58 AM
ம்ம்ம் நன்று..
ஆதலினால் காதல் செய்வது அவசியமோ :D
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 09, 2012, 11:38:10 AM
மண்ணில் இந்த காதல் அன்றி யாரும் வாழ்தல் கூடுமோ ??


நன்றி ...!
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: Dharshini on August 21, 2012, 07:56:36 PM
enaku oru doubt kavignare niga ethana kathala pathi ezhuthi irukiga kathal la pala vagai iruku athan keten
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 22, 2012, 01:33:18 PM
காதலில் பல வகை லாம் இல்லை ,
இதயம் இரண்டு இணைந்தால் அதுதான்  காதல்
காதலின் திடத்தை பொறுத்து வேறுபடும் நிலைபாடுகளே அன்றி
வகைகள் என ஏதும் இல்லை என்பது என் கருத்து .
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: Dharshini on August 22, 2012, 01:54:24 PM
enaku enavo vagai iruka mari theriuthu kavignare thaai kuzhaikal mela katurathu oru vagai kathal sagotharan sagothari mela katurathu oru vagai kathal nanban nanbi idam katurathu oru vagai kathal kathalan kathali idan katurathu oru vagai kathal aasan pilllaigalidan katurathu oru vagai kathal cho epdi solikite pogalam thane
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 22, 2012, 01:59:44 PM
puridhalin kuzhappam " kaadhal " enum vaarthaiyil

nee kooriya anaiththum anbin (kaadhalin) parimaanangaley ....
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: Dharshini on August 22, 2012, 02:18:15 PM
nono na kuzhamba villai ungalidan thelivu padutha keten intha kathalil entha kathal vagaiyai soluriganu
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 22, 2012, 02:36:47 PM
podhumaana vilakkam koduthu vitten dharshi ...

iru idhayangal inaindhaal kaadhal dhaan ena ...
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: ஆதி on August 24, 2012, 01:39:17 PM
கவிதையை கொஞ்சம் மராமத்து பார்க்க வேண்டி இருக்கு

முதல் வரியோடு அடுத்த இருவரி இசைந்து போகலை

பாரதியுடைய வரியை கையில் எடுக்கும் போது அதனுடைய கனம் ஆழம் வீரியம் அகலம் விசாலம் என்று எல்லாவற்றையும் அளந்து எழுதும் போது அதுவே சிறந்த கவிதையாகிறது

எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா!!!

என்று இறைவனிடம் வியக்கிறான், எப்படி என்று பாருங்கள்

சித்தினை அசித்துடன் இணைத்தாய் -அங்கு
      சேரும்ஐம் பூதத்து வியனுல கமைத்தாய்.
அத்தனை யுலகமும் வர்ணக் களஞ்சிய
      மாகப் பலபலநல் லழகுகள் சமைத்தாய்.

முக்தியென் றொருநிலை சமைத்தாய் - அங்கு
      முழுதினையு முணரும் உணர் வமைத்தாய்
பக்தியென் றொரு நிலை வகுத்தாய் - எங்கள
      பரமா! பரமா! பரமா! 


இறை நம்பிக்கை எல்லாதவர்கள் என்று சொல்லியிருக்குறீர்கள், இது கிட்டத்தட்ட எல்லாருக்கும் பொருந்தும்

முழுமை என்பது 100 விழுக்காடு என்று கொள்வோம்

இந்த வகையில் இந்த உலகத்தில் 100 இறைவன் இருக்க்கிறான் என்றால் எல்லாரும் ஒஅதில் ஒன்றைத்தான் நம்புகிறார்கள், மற்ற 99 நமொஉவதில், ஆக எல்லோருமே இறை நம்புக்கை இல்லாதவராகவே இருக்கிறர்கள்

இறைவனை முழுமையாஇ நம்பாதவர்கள்  99 தோடு சேர்த்து அந்த ஒன்ரையும் நம்புவதில்லை அவ்வளவுதான்

அப்படியிருக்க, எத்தனை கோடி இன்பம் வைத்தை இறைவா என்று ஆரம்பிக்கும் போது பாரதியையும் தாண்டி பலமான வரிகளை வைத்திருக்க வேண்டும், அப்படி இல்லாமல் போனதால் கவிதை கனங்குன்றி விட்டது

அதுமட்டுமல்லாது இது போன்ற தத்துவங்களை பேசும் போது அதற்கு பலமான அடிப்படை வேண்டும், அப்படி அடிப்படை இல்லாதவை நிலைப்பதில்லை

இஸ்லாத்தில் சூஃபி என்றொரு பிரிவுண்டு, அவர்கள் இறைவனை காதலனாக கொண்டு பாடல்கள் புனைவார்கள்

மனிதக்காதலில் காதல் எதிர்ப்பார்ப்பு உண்டு, அதாவது இணையும் காதலிக்க வேண்டும் எனும் எதிர்ப்பார்ப்பு

இறைக்காதலில் அந்த எதிர்ப்பார்ப்பு இருப்பதில்லை

ஆண்டாளுடையதை போல, மீராவுடையதை போல




Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 24, 2012, 04:26:47 PM
இல்லாத விடயங்களை பற்றிய விவரங்கள் வேண்டியதில்லை ...

கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு , ஆகையால்

வேண்டாத வியாக்யானங்களை விடுத்து , கருத்தினை மட்டும் கூறலாமே ?
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: ஆதி on August 24, 2012, 04:38:22 PM
வியாக்யானம் என்றால் என்ன உங்கள் புரிதலில் ?

இல்லாத விடயங்களை பற்றி பேசியதாக நீங்கள் குறிப்பிட்டிருக்குறீர்கள், எவை எல்லாம் இருந்திருக்க வேண்டுமோ அவை எல்லாம் இல்லாததால் தானே பேச வேண்டியிருக்கிறது

கல்லாதது உலகளவு எனின், கற்க மறுப்பதேன் ? கருத்தினைத்தான் கூறி இருக்கிறேன்

Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 24, 2012, 04:50:32 PM
Vendaadha vidayangalai thaaan VIYAAKYAANAM endrein !!!
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: ஆதி on August 24, 2012, 05:08:21 PM
நினைத்தேன்

வியாக்கியானம் மீதான தங்கள் புரிதல் தவறாகத்தான் இருக்குமென

நீங்கள் குறிப்பிடும் தேவையில்லாதது என்பது என்ன எனின், புகழ்ச்சியை தவிர மற்ற பிறவும்

விமர்சனம் தான் சொல்லப்பட்டிருக்கிறது

விமர்சனம் தங்கள் கவிதை மீதுதான் எழுதப்பட்டிருக்கிறது

சென்னை பல்கலைகழகத்தின் அகரமுதலியில் இருந்து வியாக்கியானத்துக்கு விளக்கம் தங்களுக்காக

. உரைகட்டு-தல் urai-kaṭṭu- : (page 451)

உரைகாரன் கருத்து. (W.)

உரைகட்டு-தல் urai-kaṭṭu-
, v. tr. < id. +. To comment on a work; வியாக்கியானம் பண்ணு தல். (W.)

உரைகல் urai-kal
, n. < உரை²- +. [T. ora- gallu, K. ora-kal, M.

--------------------------------------------------------------------------------
3. வியாக்கியானம் viyākkiyāṉam : (page 3689)

viyākkiyātā
, n. < vyā- khyātāvyākhyātṛ. Commentator, expositor; உரையாசிரியன்.

வியாக்கியானம் viyākkiyāṉam
, n. < vyākhyāna. Exposition, explanation, comment, commentary; உரை. தமக்குத் தோன் றியவா றெல்லாம்...



--------------------------------------------------------------------------------
4. வியாக்கியை viyākkiyai : (page 3689)

, n. < id. See வியாக்கியாதா. (W.)

வியாக்கியை viyākkiyai
, n. < vyākhyā. See வியாக்கியானம். நஞ்சீயர் செய்த வியாக்கியை கள் (உபதேசரத். 47).

வியாக்கிரகதி


Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 24, 2012, 07:01:23 PM
பதிப்பிற்கும் பதிலுக்கும் சம்பந்தமே  இல்லாத விளக்கங்களைத்தான்
வியாக்கியானம் என்றேன் .

வேண்டாத வாதங்களில்  எனக்கு பழக்கம் இல்லை ....
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: ஆதி on August 24, 2012, 07:05:18 PM
நானும் வேண்டுவதில்லை
Title: Re: "ஆதலினால் காதல் செய்வோம் !!!!
Post by: aasaiajiith on August 24, 2012, 07:07:53 PM
நன்றி வணக்கம் !!!