FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on August 06, 2012, 09:24:40 AM

Title: காதல் நாடி
Post by: ஆதி on August 06, 2012, 09:24:40 AM
சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்

பாட்டுக்கு சொல்தந்து - என்
பார்வைக்கு உயிர்தந்து
தீட்டுகிற எழுத்துகளில் - நீ
தீராமல் இருக்கின்றாய்

பொன்னாடிச் சிலைப்போல - உன்
பொலிவான நினைவுகள்
வினாடிச் செடியில் - வந்து
விண்மீனாய் பூக்கிறது

சின்னஇதழ் விரித்து - நீ
சிரிக்கின்ற பொழுதில்விழும்
கன்னக்குழியில் குதித்து - ஒரு
கடவுள்நிலைக் அடைகின்றேன்

காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்

முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்

காதல்நாடி வந்து - இதயத்தின்
கரை உடைக்க
காதல்நாடி ஒன்று - என்
கண்ணீராய் வழிகிறது

ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது
Title: Re: காதல் நாடி
Post by: ! SabriNa ! on August 06, 2012, 10:03:05 AM
aadhi..so nice poem..romba  feeling la ezhudhirukeenga pola..
Title: Re: காதல் நாடி
Post by: ஆதி on August 06, 2012, 10:13:29 AM
உணர்வுகளின் நடனம் தானே கவிதை

பின்னூட்டத்துக்கு நன்றி
Title: Re: காதல் நாடி
Post by: aasaiajiith on August 06, 2012, 10:22:32 AM
வணக்கம் ஆதி !

ஓரிரு சிறு எழுத்து பிழை நீங்கலாக, மிக அற்புதமான உணர்வுப்பூர்வமான  வரிகள் !!


வாழ்த்துக்கள் !!!
Title: Re: காதல் நாடி
Post by: ஆதி on August 06, 2012, 10:31:42 AM
எழுத்து பிழைகளை சுட்டினால் திருத்தி கொள்வேன்

நன்றி தோழரே
Title: Re: காதல் நாடி
Post by: aasaiajiith on August 06, 2012, 10:37:44 AM
முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்


பின் விளைவினை குறிக்கும் பொருள் தானே அது ??

என் கணிப்பு தவறில்லை என்றால் .
Title: Re: காதல் நாடி
Post by: ஆதி on August 06, 2012, 10:39:59 AM
இல்லை

விழைவு விருப்பத்தை குறிக்கும்
Title: Re: காதல் நாடி
Post by: Anu on August 06, 2012, 01:16:23 PM
சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்


பொன்னாடிச் சிலைப்போல - உன்
பொலிவான நினைவுகள்
வினாடிச் செடியில் - வந்து
விண்மீனாய் பூக்கிறது

காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்

ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது
very Nice kavithai aadhi..