FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: vimal on August 06, 2012, 01:58:23 AM

Title: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on August 06, 2012, 01:58:23 AM
என் அன்பில் கலந்த என் உயிர்க்கு !!!

அன்பே உன் வருகையால்
அன்பிற்கு அன்னையாய்
பண்பிற்கு அப்பாவாய்
பாசத்திற்கு உடன் பிறப்புகளாய்
ஒன்றாக கிடைத்த நட்பு நீயே !

நான் சோகத்தில் கண்ணீர் விடும் போது
கண்ணீர் துடைக்கும்
கரங்கள் உண்டென்று உணர்த்தினாய்
தாய் போல !

நான் கலங்கி நிற்கும் போது
உனக்கு  உறவுகளாய்
நான்  உண்டென்று உணர்த்தினாய்
உடன் பிறப்பு போல !

நான் சரிகின்ற தருணங்களில்
துணை நிற்கின்ற இதயங்கள்
உண்டென்றுஎன்னை ஊக்கபடுத்தினாய்
 தந்தையை போல !

நான் துன்பப்படும்போது என்
துயரம் தாங்காமல் துடிக்கின்ற
உன் மனம் உண்டென்று உணர்த்தினாய்
மனைவியை போல !

என் காயங்கள் வலிகளில் எதிர்ப்பார்ப்பில்லா
உறவுகள் உண்டென்று உணர்த்தினாய்
எந்த சூழ்நிலையிலும் உணர்த்தினாய்
உன் உண்மை நட்பின் உள்ளத்தை

அவன் நட்பு எனக்கு வரப்பிரசாதமாய்
என் உள்ள வலி தாங்கும் என் இதயமாய்
என்னுள் கொட்டிக்கிடக்கின்றான்
ஒருயிராய் ஒட்டிப்பிறவா சகோதரனாய்!

மயிலிறகாய் வருடுகிறான் என் உள்ளத்தை
பாசத்தால் எங்கிருந்தோ வந்த
பந்தமில்லா இவன் ,தேவர்கள் வம்சம் இவன் ,
தேன் நிலாவை போல இனிப்பவன் ,

இன்று நட்பு எனும் மூன்றெழுத்தில் முன்
ஜென்ம பிறவியாய் என் கண் முன் தோன்றி
எனக்கு வழிகாட்டியாய் ,எனை கரைசேர்க்க
கலங்கரை விளக்காய் நிற்கிறான்!

அருகில் இல்லாவிட்டாலும் , என்
நிழல் உருவாய் பின் தொடர்கிறான் ,
அதனால் தான் என்னவோ நான்
கண்ணீர் விடும் வேளைகளில் என்
நிழல் தண்ணீர் குளமாய் காட்சியளிக்கிறது!

கணினி வழி கண்டாலும் கண்  இமைக்கும்
முன் தோன்றுகிறான், நான் துன்பப்படும்
வேளைகளில் நல்லதொரு நண்பனாய்
நாசியில் மனம் கமழும் சந்தனமாய்!

உனை நேரில் காணவில்லை என்றாலும்
உன் நிழற்படம் என் கண்ணில் நிஜ உருவாய்
நிலைத்து நிற்கிறது , நான் அழுவதைக்கூட
நிறுத்திவிட்டேன் என் கண்ணில் உனை வைத்திருப்பதனால்!

உனை நேரில் காணும்போது நெஞ்சாரத்தழுவி
அன்பை இருவரும் அளவில்லாமல் செலவிட்டு
உன்னுடன் நான் கழிக்கும் நிமிடங்கள் வருடங்களாக
மாறும் அந்நாளுக்காக நான் ஏங்குகிறேன்!!!

நட்பின் வழி வந்த உனை போல
உண்மையான நட்பு தேடினாலும் கிடைக்காது ,
தானாக கிடைத்தது தன்னிகரற்ற என்
பூர்வ ஜென்ம தவத்தால்...

ஒவ்வொரு நொடியிலும் கடவுளுக்கு ,
நன்றி சொன்னேன் செவிமடுத்தமைக்காக ,
அந்த அன்பான இதயத்தில்  அசைக்க முடியா
ஒரு இடம், வாழ்வேன் என் உயிர் எனை பிரிந்தாலும்!!!

உனக்கு ஆயிரம் நன்றிகள் நண்பா!!!
Title: Re: ***என் நண்பனுக்காக ***
Post by: பவித்ரா on August 06, 2012, 03:24:59 AM
nalla kavitha murpathy thanavin kaviyum  pir paathy vimalum sernthu kalaikirukingada
Title: Re: ***என் நண்பனுக்காக ***
Post by: Thavi on August 06, 2012, 03:44:31 AM
Vimal nanba nice da umma  :-* :-\ :-* ;D
Title: Re: ***என் நண்பனுக்காக ***
Post by: ! SabriNa ! on August 06, 2012, 10:36:53 AM
arumaiyana kavidhai..vimal hassan...neengalachum irukeengaley..nanbanukaga..kavidhai ezhudha..
Title: Re: ***என் நண்பனுக்காக ***
Post by: Anu on August 06, 2012, 01:14:16 PM
miga arumaiyaana kavithai vimal :)
Title: Re: ***என் நண்பனுக்காக ***
Post by: vimal on October 01, 2012, 03:15:10 AM
என் இதயத்தில் இடம் பெற்றான் ,
இன்று என் இதயத்தையே இடம்
மாற்றிக் கொண்டான், அவன் இதயமாக,
அவனை என் நினைவுகளில் நான்
தேடுவதில்லை பார்க்க ஆசை இருந்தால்
என் இதயத்தில் கை வைத்துப்பார்பேன்
துடிப்பது தெரியும் என் நாடித்துடிப்பாய்!!!
Title: Re: ***என் நண்பனுக்காக ***
Post by: Thavi on October 01, 2012, 06:23:07 PM
Super kavithai nanba semba sada elutha da vimal  :'(
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on October 03, 2012, 06:16:43 PM
என் வாழ்வில் வரப்பிரசாதமாக வந்தவன்
இன்று வானளவில் உயர்ந்து விட்டான்
என் இதயக்கூட்டில்!!!

முதல் சந்திப்பில் கீழே விழவிருந்த எனை
தாங்கியவன், ஆனால் விழுந்தது அவன் அன்பு
எனும் விதை, என் மனதில் !!!

விழுந்த விதை மரமாகி கிளையாய் நான்
படர்ந்தேன், வேராய் அவன் நின்றான், நான்
வீழ்ந்து விடக்கூடாதென!!!

விடுதியில் நண்பன் என்ற வார்த்தைக்கு
உதாரணமாக உலாவந்தோம், ஏங்காத உள்ளமும்
இல்லை எங்கள் பாசத்திற்கு!!!

குளிர் காய்ச்சலால் குலைந்துபோன எனக்கு
போர்வையும் அவனே, அவன் உடல் சூட்டால்
என் குளிர் தனித்தான்!!!

நடைபிணமாக இருந்த என்னை தோளில் சுமந்தால்
வலி ஏற்படும் என்பதால், கைகளிலே சுமந்து சென்றான்
ஒரு மைல் தூரம்!!!

நண்பா உனக்கு கரம் வலிக்கவில்லையா என்று கேட்டதற்கு,
வலித்தது என் இதயம்,  உன் கண்ணீர் காணும்
வேளைகளில் என்றான்!!!

என் நண்பன் இரண்டடி திருக்குறள் போல், ஆனால்
இருநூறு அர்த்தங்களை கொண்டவன், நான் முழுவதும்
படித்துணர்ந்த புத்தகம் அவன்!!!

இன்று போல் என்றும் அவன் என்னுடன், ஆணிவேராய்
எனை தாங்கவேண்டும் என்று நான் கடவுளிடம்
மன்றாடுகின்றேன்!!!

நான் இறந்தாலும் என் கல்லறையின் பாதுகாவலாக
அவன் நினைவுகள் எனை பின் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கும்!!!

என் நண்பன், மாதா, பிதா, குரு, தெய்வம்,
இந்நான்கிர்க்கும் நாயகனாக விளங்கினான்
என்னுள்ளே கலந்துவிட்டான், பிரித்தாளும்
பிரியாத உறவாய் நாங்கள் தொடர்வோம்
எங்கள் உயிர் பிரியும் வரை!!!

நன்பேண்டா!!!
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: Thavi on October 03, 2012, 08:04:07 PM
vimal nanba remba arumaiya un nanbanai patri solli iruka ungal nadpu endrum vaalvil thodara ennudaiya vaalthugal da
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on October 03, 2012, 08:08:34 PM
thanx da nanba  :-* :-* :-* :-*
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: Thirudan on October 04, 2012, 03:20:26 AM
mulusa read pannala but starting a nalla irukku machi keep it up superb
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on January 18, 2013, 10:15:59 PM
கண்களில் தொடங்குவதில்லை காதல்போல
இதயத்தில் இதமாய் பதிந்து, உள்ளத்தில்
நகரமுடியா ஊனமாய் அமர்வது ஆயிரம்
உறவுகள் கொண்ட உன் நட்பு, தோழன் மட்டும்
தோள்கொடுப்பதில்லை தோழியும்தான்
தோல்விகள் சந்திக்கும் வேளைகளில், உன்
தோழமை உணர்ந்தேன் தோழியே என்
வெற்றிப்படிக்கட்டாய் , என் மகிழ்ச்சியின்
சாவிக்கொத்தாகவும், மனக்கவளைகளுக்கு
மருந்தாகவும் நின்றாயே , சொல்ல
வார்த்தையில்லை தோழியே, வம்சம் வழி
வராவிட்டாலும்  வானளவு உயர்ந்துவிட்டாய்
தோழியே!!!
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on January 20, 2013, 02:47:33 AM
ஒரு சொல் மூன்றெழுத்து முடிவிலா
உறவு நட்பு , குருதி வழி வந்தால் கூட
சித்தி, சித்தப்பா, மாமா, அத்தை என
உறவுகளை பிரிக்கலாம், குருதியில்
சேரா பிரிக்கமுடியா ஒரே உறவு நட்பு,
எங்கோ பிறந்து , எங்கோ வளர்ந்து
எதார்த்தமாய் பழகி உயிருக்குள்
கலப்படமாகும் உறவு நட்பு , அது
உறவல்ல கடவுளின் உன்னதமான
படைப்பு , நட்பின் நவரசத்தை
நாம் அனைவரும் உண்டு ரசித்து
நண்பர்களின் நம்பிக்கைக்கு
தாசனாய் இருப்போம்!!!


Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: பவித்ரா on January 20, 2013, 03:00:16 AM
நல்ல எழுதி இருக்கட உன் சிந்தனையே வேரடா தொடர்ந்து எழுதுட நண்பா

ஒரு சொல் மூன்றெழுத்து முடிவிலா
உறவு நட்பு ,
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: ஸ்ருதி on January 20, 2013, 09:43:05 AM
நண்பர்களின் நம்பிக்கைக்கு
தாசனாய் இருப்போம்!!!

நல்ல வரிகள்
நம்பிக்கையான நட்பு கிடைப்பது அரிது....
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: Global Angel on January 21, 2013, 03:40:47 AM
Quote
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%3Cbr+%2F%3E%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%21%21%21&hash=a27ceb5849fe64d7dcf40e19b4eda6d34afa3c02)

நண்பர்கள் என்று சொல்பவர்கள் எல்லாம் நட்புக்கு இலகனமானவர்கள் அல்ல அப்படி இருக்கும்போது நண்பர்களுக்கு தாசனாய் இருப்பது அவமானமே .... நட்புக்கு தாசனாய்  இருக்கலாம் ... நண்பர்களுக்கு வேணாமே .... கவிதை வரிகள் அருமை விமல்
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on January 21, 2013, 01:48:02 PM
global angel நீங்க சொல்வது மிகவும் சரியானதுதான் ஆனால் கவிதையில் நான் நண்பர்களின் நம்பிக்கைக்குதான் தாசனை இருப்போம் என்று கூறியுள்ளேன்(உண்மையான அன்புடைய நண்பர்களுக்கு தாசனாய் இருக்கலாம்)
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on January 22, 2013, 01:14:08 PM
ஏர்கலப்பை கொண்டு நிலத்தில்
ஏர் உழுது பயிரிடும் உழவன்
மண்மீது கொண்ட நாட்டத்தை
என்னவென்று சொல்வது

நட்பா???      காதலா???

நட்பாய் மட்டுமே இருக்க முடியும்
காதல் உரித்தானவர்களுக்கு மட்டும்
உள்ளத்தை கொடுப்பது,
நட்பு நம்பிய அனைவருக்கும்
ஊனமில்லா  அன்பை தருவது,

இம்மண்ணை நம்பிய உழவன் போல,
உழவனை நம்பிய புவியை போல, என்
நண்பன் மீது நான் கொண்ட நட்புபோல!!!
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on January 27, 2013, 02:31:59 AM
அரும்புகளாய் கும்புகள் தொடங்கும்
வயதில் தொடங்கவில்லை,
கருத்துணர்ந்தபின்பே கைக்கோர்த்தோம்,
பிளவுகள் சில வெடித்த போதும்
பிசினியாய் ஒட்டியதே தவிர
பிளக்கவில்லை,

பள்ளியில் உன்னுடன் நான் பழகிய
அழகிய நாட்களின் அணிவகுப்பை
என்னவென்று சொல்வது நண்பா,
அழியா ஞாபகம் என் உடல் அழியும்
வரை, மாறா ஞாபகம் மண்ணுக்கு
மகனாகும் வரை,

பிறந்த நாளன்று நீ கொடுத்த பரிசு
அன்பின் அடையாளமாக அடைகாக்கிறேன்,
முட்டை போல உடைந்து வெளிவர இல்லை
அட்டைப்போல என்னுடன் ஒட்டி
உறவாட, கட்டிவிட்டேன் மதில் சுவற்றை
என் மனதில்,

என் மதிப்பெண் குறைத்த ஆசிரியருக்கு
அடிஉதை கொடுத்தாய், மதில் பூனையாய்
விடுதியை விட்டு எழுபது மைல்கல்லை
கடந்து திருட்டுத்தனமாய் இரசித்த
இரண்டு திரைப்படம், பிரசித்தி
பெற்றது நம்மாலே நானறிவேன்,

மறவா ஞாபகத்தை மறந்தேன்
அன்றே நான் இறந்தேன், எதை எதையோ
எதிர்பார்க்கும் உறவுகளுக்கிடையே
எதிர்பார்ப்பு இல்லாமல் கிடைத்தது
உன் உறவு எனக்கோர் நல்வரவு, காலம்
கடந்து வாழவேண்டும் ஏழு வருடமாக
தொடரும் நம் நட்பு, உதிரம் கொடுத்து
உயிர் கொடுத்த என் தாயன்பு போல
உன் அன்பில் என்றும் நனைய நான்
ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்,

நன்பேண்டா!!!


Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: Bommi on January 29, 2013, 07:21:22 PM
அருமையான படைப்பு டா விமல்
தொடர்ந்து எழுத உன் கவிதைக்கு வாழ்த்துக்கள்
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on February 08, 2013, 01:49:39 PM
பொம்மி நன்றி தோழி....
Title: Re: ***என் நண்பர்களுக்காக ***
Post by: vimal on February 19, 2013, 01:48:23 PM
கடவுளின் உன்னதமான படைப்பு
உறவில்லாமல் உயிர் கொடுக்கும் நட்பு,
மண்ணில் தோன்றிய உயிர்கள் அனைத்தும்
காதலில் வீழ்கிறதோ இல்லையோ நட்பு
வலையில் வீழ்ந்து வாழத்தான் செய்கின்றன,

முகம் பார்க்காது,அகம் பார்க்காது,
புறம் பார்க்காது, ஜாதி,மதம்,பேதம் பார்க்காது,
உண்மையான அன்பை மட்டும் எதிர்பார்ப்பு
இல்லாமல் ஏற்கும் கொடுக்கும் உறவு,

மழலை மொழிபோல நட்பிற்கென தனிமொழி
மச்சான்,மாமா,பங்காளி,சகல,......... இவை
அனைத்தும் குறிப்பது ஒரு அடையாளம்
நட்பு மட்டுமே,

தோளில் சாய தோழி ஒருத்தி இருந்தால்
தோல்விகள் கூட சுகம்தான்,
தோழன் ஒருவன் அருகில் இருந்தால்
வீழ்வது கூட சுகம்தான்,

மரணம் என்னிடம் மன்றாடும்போதும்
உனை மறவாத இதயம் வேண்டும்,
மருபிறப்பெனக்கு உண்டானால் அதிலும்
நீயே வேண்டும் உறவாக அல்ல
என் உயிர் நட்பாக!!!

நன்பேண்டா :-*