FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Tamil NenjaN on August 05, 2012, 12:56:53 AM

Title: காதலைப் போல நட்பும் இனிக்கும்
Post by: Tamil NenjaN on August 05, 2012, 12:56:53 AM
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
ஏனோ தனிமையில் இருப்பதாய்
உள்ளம் தவிக்கும்
காதலும் நட்பும் மட்டும்தான்
அன்பான உறவாய் தோன்றும்

நட்பு அருகில் இருந்தால்
உலகம் இனிமையாய்தோன்றும்
காதலின் அருகாமையில்
இன்னும் பல பிறவிகள்
வாழத் தோன்றும்

நட்பும் காதலும் இருந்தால்
சந்திப்புகள் இனிக்கும்
இல்லாத தருணங்களில்
காத்திருப்புகளும் வலிக்கும்

ஆயிரம் ஆயிரம் கற்பனைகளை
நட்பின் உள்ளம் சுவாசிக்கும்
கற்பனைகளையே காவியமாக்கி
காதல் உள்ளம்
கவிதை வடிக்கும்

சந்தோசங்களும் சோகங்களும்
கலவையாய் இருக்கும் நட்பில்
சோகங்களும் கூட
சுகமாகிப் போகும் காதலில்

தென்றலின் வருடலாய்
நட்பிருக்கும்
பூவின் வருடலாய்
காதலின் அருகாமை
தேனின் இனிமையாய்
காதலின் மொழிகள் கேட்கும்

பேசாத கணங்களின் நிசப்தத்திலும்
சந்திக்காத நாட்களின் இடைவெளியிலும்
நட்பின் மொழி
தெளிவாகக் கேட்கும்
காதலின்  இனிய நினைவுகள்
மனதை தாலாட்டும்