FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on August 07, 2011, 01:47:31 PM
-
எங்கே இருக்கிறாய்நீ.. ??? ?
காணும் இடங்களில்
எல்லாம் உன் முகம்
மின்னலாய் வந்து
மறையும் மாயம் என்ன??
என் வீட்டைக் கடந்து போகும்
வாகனத்தின்
ஒளியைக் கேட்டு
ஓடி வந்து பார்த்து
ஏமாற்றம்...
மரக்கிளையில்
கொஞ்சி மகிழும் பறவைகள்...
என் மனம்
பொறாமையில் தவிக்க..
சொல்ல முடியா வகையில்
கோபம் உன் மேல்
வேண்டாம் என்றேன்
என்னுள் வந்தாய்
வேண்டி நிற்கிறேன்
என் கண்ணை விட்டு
எங்கே மறந்தாய்...
கண்களை மூடினால்
ஒரு இருட்டு
இருட்டினில் ஒளியாய்
உன் முகம்
உன் முகம் பார்த்தே
தூங்கி கொண்டு இருக்கிறேன்
விடியல் பிடிக்கவில்லை..
உன்னை கண்ணில் இருந்து
விரட்டும் இவ்விடியல்
எனக்கு மட்டும் வேண்டாம்...
உனக்காக காத்திருக்கிறேன்..
உன் உயிரை கொண்டு
உன்னோடு வாழும் வரம் வேண்டும்..
என் உயிரை தருகிறேன்...
உன்னோடு வாழ...
உன்னை மட்டும்
தந்து விடு எனக்கு... :P ;)
-
Nice one :) own ah :P yara pathi eludirka nu solavae ila :(
-
adiye ellam karpanai di :D ;)
-
உனக்காக காத்திருக்கிறேன்..
உன் உயிரை கொண்டு
உன்னோடு வாழும் வரம் வேண்டும்..
என் உயிரை தருகிறேன்...
உன்னோடு வாழ...
உன்னை மட்டும்
தந்து விடு எனக்கு.
inimayana varikal ;)
-
Angel nice...Nalla rasichu reply pannum pothu Parkave happy-a iruku :P
-
:-*
சும்மா சொல்ல கூடாது மிக நன்றாகவே ஏறுகிறது உங்கள் ஒவொரு கவிதையும் -