FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on July 31, 2012, 08:22:56 PM

Title: ~ ‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்… ~
Post by: MysteRy on July 31, 2012, 08:22:56 PM
‘வல்லாரை’யின் மகத்துவம் அறிவோம்…

நோய் தீர்க்கும் நல்ல மருந்தாக விளங்கும் வல்லாரை மூலிகை பயன்களை இன்றும் காணலாம்.

வல்லாரைச் சாறு ஒரு பங்கு, சுத்தமான நல்லெண்ணெய் ஒரு பங்கு எடுத்து இரண்டையும் கலந்து பக்குவமாக காய்ச்சி நீர் சுண்டிய பின்னர் இற க்கி விட வேண்டும். ஆறிய பின்னர் வடிகட்டி கண்ணாடி பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். இதை கூந்தல் தைலமாக தினமும் தலையில் தடவி வந்தால் தலைமுடி அடர்த்தியாக வளரும்.

குழந்தைகளுக்கு ஞாபசக்தி, அறிவுக்கூர்மை, சிந்தனை திறன் வளர, வல்லாரை இலைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். அதிகபட்சமாக 2 கிராம் அளவு தூளை காலை, மாலையில் அரை தம்ளர் பாலில் கலந்து உள்ளுக்குள் கொடுக்கலாம். வலிப்பு நோய் உள்ள குழந்தைகளுக்கு வல்லாரையை மருந்தாக உள்ளுக்குள் கொடுக்கக் கூடாது.

ஒரு பிடி இலைகளை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து 100 மில்லியாக வரும் வரை சுண்டக் காய்ச்சிக் கொள்ள வேண்டும். அதை வேளைக்கு 50 மில்லி அளவில் தொழு நோயாளிக்கு தினமும் 2 வேளைகள் குடிக்க கொடுக்கலாம். வல்லாரை தாவரத்தில் இருக்கும் ‘ஆசியாட்டி கோசைடு’ எனப்படும் மருந்து பொருட்கள் தொழுநோயை குணப்படுத்த உதவுகிறது. இவை தோல், முடி, நகங்களின் வளர்ச்சியை தூண்டுவது ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்டு உள்ளது.