FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஸ்ருதி on July 30, 2012, 10:41:00 PM
-
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.anonlinedating.com%2Fwp-content%2Fuploads%2F2012%2F01%2FI-Love-You-More.jpg&hash=a83f5747c4d48804406d5f7168f716ef0d4b6bd9)
ஆசைகளை அளவில்லாமல்
சொல்லிவிட ஆசை
அத்தனையையும் நீ
நிறைவேற்றுவதாய்
இருந்தால்...
கோபங்களை கொட்டி தீர்க்க
ஆசை..
கோபத்தை
தணிக்க நீ அருகே
இருப்பதாய் இருந்தால்..
எல்லாமே மனதுக்குள்
பூட்டி வைத்து
துடித்துக் கொண்டிருக்கிறேன்..
என் நாள்
எல்லாம் உன்னுடன்
மட்டுமே தொடராதோ....
நீ இல்லாத நாள் எல்லாம்
வெறும் கனவாய் மறையாதோ...
உரிமை இல்லா
உன்னிடம்
உரிமையாய் நேசிப்பவள்..
உணராது போயினும்
உணர்வுகளுடன்
உன்னை மட்டுமே
உண்மையாய் நேசிப்பவள்..
உயிர் மரித்தாலும்
உன் நினைவுகளுக்கு மட்டும்
உயிர் தந்து வாழ துடிப்பவள்
என் இதயமே
என்றாவது ஒரு நாள்
நீயும் உணருவாயா
என் உண்மை நேசத்தை...