FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ஆதி on July 30, 2012, 08:05:06 PM
-
பேனாவும் பெண்விழியும் - சிலேடை1
வெண்பா
நீண்டிருக்கும் சுற்றும் நிலம்நோக்கும் மைப்பூணும்
ஆண்டிருப் போனாட்சி சாய்க்கும் ஜெகமதிர்த்தும்
சொல்லா தனசெய்யும் சொல்லுக பேனாவும்
பொல்லாத பெண்விழியும் ஒன்று!
பிகு:- பேனா - ballpoint என கொள்க.. தவறுகள் இருந்தாலும் சுட்டுக மக்கா..
நீண்டிருக்கும் - நீளமாக இருக்கும்
சுற்றும் - எழுதுகையில் பேனாவின் முனை சுற்றும் / சுற்றும் விழி சுடரே :)
நிலம்நோக்கும் - எழுத முனைகையில் நிலம் நோக்கும் / நாணத்தில் இமை மடுத்து நிலம் நோக்கும்
மைப்பூணும் - மை நிரப்பில் கொள்ளும் / மை தீட்டுவர்
ஆண்டிருப்போன் ஆட்சி சாய்க்கும் - பத்திரிகைகளின் எழுத்தாலோ எத்தனையோ ஆட்சி மகுடங்கள் மாறி இருக்கின்றன / காதலுக்காக மகுடம் துறந்தவர் பலர் உளர்
ஜெகமதிர்த்தும் - புரட்சி எழுத்துக்கள் சரித்திரங்களை புரட்டி போட்டிருக்கின்றன / அபிநய விழிகள் அவையை அதிர செய்யும் (பரதத்தில்)
சொல்லாதன செய்யும் - மேலே குறிப்பிடாத இன்னும் பலவற்றையும் செய்யும்
சொல்லுக பேனாவும் பொல்லாத பெண்விழியும் ஒன்று! - ஆகையால் சொல்லுக பேனாவும் வயப்படுத்தும் பெண்விழியும் ஒன்று என்று
-
பேனாவும் பெண் விழியும் ஒன்று ... ஹஹஹஹாமிகவும் அருமையான விளக்கம் ... நன்று ஆதி ...உங்கள் முதல் பதிவே முத்தாக உள்ளது தொடரட்டும் உங்கள் பயணம்
-
பின்னூட்ட ஊக்கத்துக்கு நன்றி Global Angel
-
Very Nice Kavithai aadhi ..
-
நன்றிங்க அனு அக்கா
-
காதலும் கடனும் - சிலேடை 2
வெண்பா
கைதனை நீட்டுவாய், சிரிப்பில் அசடுசிந்தும்
பொய்வாய் உறுதிகள் ஈந்திடுவாய் - தைரியம்
தூர்ந்திட ஓடுவாய் தொங்குவாய் ஆதலினால்
நேர்படும்,கா தல்முன் கடன்!
விளக்கம்:-
கைதனை நீட்டுவாய் - காதல் கரம் நீட்டுவாய் உன் இணை நோக்கி..
கடன் வாங்க மற்றவர்களிடம் கைநீட்டுவாய்..
சிரிப்பில் அசடு சிந்தும் - சின்னச் சின்ன ஊடல்களில் உதட்டு சிரிப்பில் அசடு சிந்தும்..
கடன் வாங்கும் போதும் கடன்காரனிடம் தவனைக் கேட்கும் போதும் உதட்டுச் சிரிப்பில் அசடு சிந்தும்..
பொய்வாய் உறுதிகள் ஈந்திடுவாய் - காதலிக்கு இணையைக் கவர* நிறையக் கதைவிடுவாய்..
பாக்கிகளைக் கொடுப்பதாய் நாளை அடுத்தவாரம் முதல்தேதியென பொய்வாய் உறுதிகள் ஈதிடுவாய்..
தைரியம் தூர்ந்திட ஓடுவாய் - எதிர்ப்புகளை எதிர்க்க முடியாத பட்சத்தில் இணையை இழுத்துக் கொண்டு ஓடுவாய்..
கடனில் முழ்கிப்போகையில் தலைமறைவாவாய்..
தொங்குவாய் - குழைந்து கெஞ்சிப்பார்ப்பாய் இணையை எப்படியும் திருமணம் முடிக்க.. இல்லை.. தாலியாய் இணையின் கழுத்தில் தொங்குவாய்..
கடன்காரனில் இருந்து தப்பிக்க முடியாத சூழலில் தூக்கிலும் தொங்குவாய்..
இப்படி ஒற்றுமைகள் உள்ளதால் காதலுக்கு இணை கடன் என கொள்ளலாம்..
-
தோடும் யானையும் - சிலேடை
காதாடும் முத்துறும்க னங்குழை என்றுபடும்
சேதாரம் செய்யும்ஊ சிக்கடங்கும் - ஆகாரம்
தேடகடை ஏறும் குழியில் பிடிபடும்
தோடணியும் யானையும் நேர்
விளக்கம் :
காதாடும் - யானை தூங்கும் போதும் காதாடும் / தோடு காதிலாடும்
முத்துறும் - தந்தத்தில் முத்து இருக்கும் / முத்துக்கள் பதித்து இழைத்திருப்பர்
கனங்குழை என்றுபடும் - துதிகை கனமான குழைப்போல் இருக்கும் / கனங்குழை என்றும் தோடை அழைப்பர்
சேதாரம் செய்யும் - மதம் பிடித்தால் யாவையும் மோதி அழிக்கும் / கனங்குழை அணிவதால் காது தொங்கி போய் சேதாரமாகும்..
ஊசிக்கடங்கும் - அங்குசம் எனும் ஊசியால் மதத்தை அடக்குவர் / காது குற்றுதல்
ஆகாரம் தேட கடை ஏறும் - தம்முடைய ஆதாயத்துக்காக யானை பிச்சை எடுக்க வைப்பவரும் உண்டு / வறுமை காலத்தில் கடைக்கு அடகுக்கு போகும்
குழியில் பிடிபடும் - யானை குழிவெட்டி பிடிப்பர் / திருகாணி குழியில் திருகி தோடை அணிவர்..
-
நன்று கவிதைகள் எனக்கு ஒரு சந்தேகம் ... யானை தந்தங்களில் முத்து இருக்குமா ..
-
ஐம்பெருங்க காப்பியங்களில் யானையின் தந்தத்தில் முத்திருக்கும் என்று சொல்லியிருக்கின்றனங்க
அந்த தைரியத்தில் தான் எழுதினேன்
-
apdiyaa ... kelvipaddathillai .... moonkilil muththu irupathaai kelvi paddirukinren ... athu pola thanthathaal aana kanagi silambu onril pavalamum matronril muthum irunthathunu padichiruken ... aana thanthathukul iyarkayave muththu irukinrathenbathu sandegame .. :o
-
http://www.namadhunambikkai.com/2010/04/01/1119/
இந்த சுட்டியில் யானை தந்தத்தில் முத்து உருவாவதை பற்றி சொல்லிப்பட்டிருக்கு பாருங்களேன்
வைரமுத்துவின் ஒரு கவிதையில் அது இருக்கு, தமிழுக்கு நிறமுண்டு தொகுப்பு என்று நினைக்கிறேன்
இன்று தேடி சொல்கிறேன்
-
பாம்பும் கடலும் - சிலேடை
ஊர்ந்தே அலைந்திடும் ஊரடித்து கொல்லும்,மண்
சார்ந்திருக்கும் சுற்றி படுத்திருக்கும் - கார்நிறமும்
உற்றிருக்கும் நச்சமுண்டாம் முற்றி யமணியும்
பெற்றெடுக்கும் பாம்புகடல் நேர்.
-
விலை மதிப்பற்ற மாணிக்க கல்லை கொடுக்கும் பாம்பும் .... விலை மதிப்பற்ற முத்துகளை கொடுக்கும் கடலும் ஒன்றென்று சொல்லி இருகின்றீர்கள் அப்டிதானே
-
ஐம்பெருங்க காப்பியங்களில் யானையின் தந்தத்தில் முத்திருக்கும் என்று சொல்லியிருக்கின்றனங்க
அந்த தைரியத்தில் தான் எழுதினேன்
naanum padichatha nenapu iruku..
yaanai thanthathula muthu irukunnu.
nalla oppeedu aadhi. nice kavithai :)