FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on August 06, 2011, 03:19:47 PM

Title: கண்ணீரை.. உலகமயமாக்கு..
Post by: Yousuf on August 06, 2011, 03:19:47 PM
காட்டில் குருதியைக் குடிக்கும்
அட்டையை சுட்டுகொளுத்துவோம்
நாட்டில் நம் ரத்தத்தை உறிஞ்சும்
குட்டிகொசுவையும் கொல்லுவோம்

அடுத்தவன் நாட்டில், பெருவல்லரசும்
அதிரடியாய் புகுந்து, அதற்கும் நியாயம்
உலகுக்கு கற்பித்து , எரிஎண்ணெயையும்
உயிரையும் குடிக்கும் கொடுமையையும்

ஜனநாயம் பேசும், பணநாயகம் பாடும்
இனப்படுகொலை தினம் பல செய்யும்
மனசாட்சி அற்றவரைக் கண்டிப்போம்
என காத்தரினா, ரீட்டா, வில்மா மட்டும்

நூறுகோடி மக்கள் நாம் இருந்தும்
போறாத நிலத்தடி நீர்வளத்தையும்
கூறு போட்டு உறிஞ்சுபவரையும்
யாரு தட்டிக்கேட்பது என்போம்

நதியை இணைக்க சும்மா பேசுவோம்
வறுமையை தாராள மயமாக்குவோம்
தண்ணீரை தனியார் வசமாக்குவோம்
கண்ணீரை உலக மயமாக்குவோம்!
Title: Re: கண்ணீரை.. உலகமயமாக்கு..
Post by: Global Angel on August 06, 2011, 05:39:57 PM
நதியை இணைக்க சும்மா பேசுவோம்
வறுமையை தாராள மயமாக்குவோம்
தண்ணீரை தனியார் வசமாக்குவோம்
கண்ணீரை உலக மயமாக்குவோம்!

nalla kavithai samuthaya vilipunarvai kondu varavendiyathan avasiyam ovoruvarukum oureya vendum :)
Title: Re: கண்ணீரை.. உலகமயமாக்கு..
Post by: Yousuf on August 06, 2011, 05:48:50 PM
நன்றி...!!!