FTC Forum
Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 29, 2012, 08:30:34 PM
-
ஒருவர் என்ன பரிகாரம் செய்தாலும் அவரது ஜாதகத்தில் குருவின் அருள் இல்லாவிட்டால் அந்தப் பரிகாரத்தால் எந்தப் பலனும் இல்லை என சிலர் கூறுகின்றனர். ஜோதிட ரீதியாக இதில் உண்மை உள்ளதா?
பதில்: பொதுவாக ஒருவர் பரிகாரம் செய்வதற்கே நல்ல நேரம் அமைய வேண்டும். அனைவருக்கும் பரிகாரம் செய்யும் வாய்ப்பு கிடைக்காது. பரிகாரம் செய்தாலும் அதற்கு தகுதியானவரைக் கொண்டு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.
நல்ல தசா புக்தி வரும் போது சில குறைகளை (பரிகாரம் மூலம்) நிவர்த்தி செய்து கொள்ளும் வாய்ப்பு ஒரு சிலருக்கு கிடைக்கிறது. எனினும், குரு அருள் இருந்தால் மட்டுமே பரிகாரம் பலன் தரும் எனக் கூறுவது ஏற்புடையதல்லை.
ஏனென்றால் ‘குரு பார்த்தால் கோடி நன்மை’ என்று ஜோதிடம் கூறினாலும், ஒவ்வொருவரின் ஜாதகத்திற்கு ஏற்ப குரு அளிக்கும் பலன்களில் மாற்றம் இருக்கும். ஒரு சில ஜாதகங்களில் குரு பார்த்தால் கெட்டது நடக்கும். ஏனென்றால் அனைவரும் குரு நல்ல பலன்களை வழங்க மாட்டார். அவரவர் நட்சத்திரம், ராசி, ஜனன கிரக அமைப்பைப் பொறுத்து குரு பலன் மாறுபடும். ஒரு சிலருக்கு பாதகாதிபதியாகவும் வருவார்.
ஆனாலும், பரிகாரம் செய்யும் தருணத்தில் குரு நல்ல நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக அந்தக் காலகட்டத்தில் பரிகார லக்னத்தை குரு பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் பரிகாரம் முழுமையான பலனைக் கொடுக்கும்.