FTC Forum

Special Category => ஜோதிடம் => Topic started by: Global Angel on July 29, 2012, 06:42:08 PM

Title: பழங்குடிகள் இன்னல் அனுபவிப்பதேன்?
Post by: Global Angel on July 29, 2012, 06:42:08 PM
சமீபமாக பார்த்தீர்களென்றால், யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் அவர்கள் பாட்டுக்கு ஒரு உலகமாக வாழ்ந்துக் கொண்டிருக்கக் கூடிய பழங்குடியின மக்களுக்கு இன்னல்கள் தொடர்ந்து வருகிறது. இங்கு மட்டுமல்ல, இந்தியா முழுவதும் இந்த நிலை இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?

ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்: பழங்குடி, காடு இதற்கெல்லாம் உரிய கிரகம் சனியும், ராகுவும்தான். தற்பொழுது சனி, உத்திரம் - அதாவது சூரியனுடைய - நட்சத்திரத்தில் போய்க் கொண்டிருக்கிறார். ஏறக்குறைய ஆகஸ்ட் மாதம் வரைக்கும் இந்த சூரியனுடைய நட்சத்திரத்தில் போய்க் கொண்டிருப்பார். ராகு கோதண்டத்தில் உட்கார்ந்திருக்கிறார். கோதண்டம் என்பது தனுசு. தனுசு ஒரு போர்க் கருவி, ஒரு ஆயுதம். அந்த ஆயுதத்தோட வீட்டில் ராகு இருக்கும் வரைக்கும் இந்த நிலை நீடிக்கும். இது 2011 மே அல்லது ஜூன் மாதம் வரைக்கும் இந்த நிலை நீடிக்கும்.

இந்த ராகுவும், சனியும் சரியில்லாத இடங்களிலும், பகை நட்சத்திரங்களில் சென்றுக் கொண்டிருக்கும் நேரங்களில் எல்லாம், அதாவது பூர்வீகக் குடிகள் என்று சொல்வார்கள் இல்லையா, அவர்கள். பிறகு சூரியனே நுழைய முடியாத இடத்தில் நுழைந்து அந்தக் காட்டையை அழித்துவிட்டார்கள் என்று சொல்வார்களே அந்த மாதிரியெல்லாம் நடக்கும். மேலும் ஓசோன் படலத்திற்கு அழிவு, இயற்கையான உணவுச் சங்கிலி என்று சொல்வோமே, எலி ஒன்றைப் பிடித்து சாப்பிடும், எலியை பூனை பிடித்து சாப்பிடும், பூனை இன்னொன்று பிடித்து சாப்பிடுவது உணவுச் சங்கிலி. இதிலும் சில மாற்றங்களையெல்லாம் இந்த சனியும், ராகுவும் ஏற்படுத்தும். சனி பகவானைப் பார்க்கும் போது, செப்டம்பரில் இருந்து இந்த நிலை மாறும். ராகுவை பார்க்கும் போது அடுத்த வருடம் மே அல்லது ஜூனில் இருந்தஇவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் தீரும்.